தாரகைமாலை

தாரகைமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். இப்பெயரிலான சிற்றிலக்கியம் குறித்து இரண்டு வகையான இலக்கணங்கள் பாட்டியல் நூல்களில் காணப்படுகின்றன. கற்பிற் சிறந்த அருந்ததியை ஒத்த மகளிரின் கற்பின் சிறப்புப் பற்றிப் பாடுவதே தாரகைமாலை எனச் சில பாட்டியல் நூல்கள் கூறுகின்றன[1][2]. ஆனால், அசுவினி முதல் ரேவதி வரையான இருபத்தேழு நட்சத்திரங்களின் சிறப்புக்களைக் கூறுவதே தாரகைமாலை என்பது வேறு சில பாட்டியல் நூல்களின் இலக்கணம்[3].

குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 867
  2. இலக்கண விளக்கம், வெண்பாப் பாட்டியல், பிரபந்த தீபிகை, முத்துவீரியம் என்பன இவற்றுட் சில.
  3. பன்னிரு பாட்டியல், பிரபந்த மரபியல் என்பன இவற்றுட் சில

உசாத்துணைகள்

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/index.php?title=தாரகைமாலை&oldid=16828" இருந்து மீள்விக்கப்பட்டது