தாமஸ் கெநீலி
தாமஸ் கெநீலி (Thomas Keneally) (பிறப்பு: அக்டோபர் 7, 1935) ஒரு ஆத்திரேலிய எழுத்தாளர்களில் ஒருவர் மற்றும் புதின எழுத்தாளர். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் பிறந்தார். இவரை பிரபலமாக்கியது சின்ட்லேர்ஸ் ஆர்க் (Schindler's Ark) என்ற இவரது புதினம் ஆகும். இப்புதினத்தை 1982 ஆம் ஆண்டு வெளியிட்டார். மேலும் இந்த புத்தகத்திற்காக புக்கர் பரிசு பெற்றார். இந்த புத்தகத்தை எழுத மிகவும் உதவியாகவும் அதே சமயத்தில் எழுத ஒரு தாக்கமாக இருந்தவர், போல்டேக் ஃபெஃபெர்பெர்க். தாமஸ் கெநீல்லியின் ச்சின்ட்லேர்ஸ் ஆர்க் புத்தகம் பின்னர் "ச்சின்ட்லேர்ஸ் லிஸ்ட்" என்ற பெயரில் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் 1993 இல் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெளியிட்டார் மேலும் இப்படம் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது.
தாமஸ் கெநீலி
இயற்பெயர் | தாமசு கெநீலி Thomas Keneally |
---|---|
பிறப்புபெயர் | தாமசு மைக்கேல் கெநீலி |
பிறந்ததிகதி | 7 அக்டோபர் 1935 |
பிறந்தஇடம் | சிட்னி, நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியா |
பணி | புதினம் (இலக்கியம்) |
தேசியம் | ஆத்திரேலியா |
வகை | புதினம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | மான் புக்கர் பரிசு |
வெளி இணைப்புகள்
- Tom Keneally at Random House Australia பரணிடப்பட்டது 2014-05-17 at the வந்தவழி இயந்திரம்
- Life and Works of Thomas Keneally