தவராசா கலையரசன்

தவராசா கலையரசன் (Thavarasa Kalaiarasan, பிறப்பு: 16 ஏப்ரல் 1970) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

தவராசா கலையரசன்
நாடாளுமன்ற உறுப்பினர்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஆகத்து 2020
தொகுதி தேசியப் பட்டியல்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
2012–2017
தொகுதி அம்பாறை மாவட்டம்
தனிநபர் தகவல்
பிறப்பு தவராசா கலையரசன்
16 ஏப்ரல் 1970 (1970-04-16) (அகவை 54)
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

வாழ்க்கைக் குறிப்பு

கலையரசன் 1970 ஏப்ரல் 16 பிறந்தார்.[1] இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஆவார்.[2] இவர் நாவிதன்வெளி பிரதேச சபையின் தலைவராகவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினராகவும் இருந்தவர்.[2][3]

கலையரசன் 2012 மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[4] பின்னர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு, கூட்டமைப்பு வேட்பாளர்களில் இரண்டாவதாக வந்தும், நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[5][6][7] இவர் மீண்டும் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இம்முறை கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட எவரும் தெரிவு செய்யப்படவில்லை.[8][9] ஆனாலும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தமிழர் பிரதிநிதித்துவம் எதுவும் கிடைக்காததால், இவர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்டார்.[10][11][12]

தவராசா கலையரசனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2012 மாகாணசபை[13] அம்பாறை மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு
2015 நாடாளுமன்றம்[6] அம்பாறை மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவாகவில்லை
2020 நாடாளுமன்றம் அம்பாறை மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவாகவில்லை
(தேசியப் பட்டியல் மூலம் தெரிவு)

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Directory of Members: Thavaraja Kalai Arasan". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3443. பார்த்த நாள்: 8 September 2020. 
  2. 2.0 2.1 D. B. S. Jeyaraj (22 August 2020). "Future course of defeated ITAK leader “Maavai” Senathirajah". The Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/Future-course-of-defeated-ITAK-leader-Maavai-Senathirajah/172-194345. பார்த்த நாள்: 8 September 2020. 
  3. "Meet your new parliamentarians". Sunday Times (Colombo, Sri Lanka). 23 August 2020. http://www.sundaytimes.lk/200823/news/meet-your-new-parliamentarians-2-413457.html. பார்த்த நாள்: 7 September 2020. 
  4. "Preferential votes". Daily News (Colombo, Sri Lanka). 10 September 2012. http://archives.dailynews.lk/2012/09/10/pol08.asp. பார்த்த நாள்: 8 September 2020. 
  5. 6.0 6.1 "Ranil tops with over 500,000 votes in Colombo". Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. பார்த்த நாள்: 8 September 2020. 
  6. "Preferential Votes". Daily News (Colombo, Sri Lanka). 19 August 2015 இம் மூலத்தில் இருந்து 20 August 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  7. "General Election 2020: Preferential votes of Digamadulla District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201001070529/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-digamadulla-district. பார்த்த நாள்: 8 September 2020. 
  8. "National List members of SLPP, AITC, ITAK gazetted". Ceylon Today (Colombo, Sri Lanka). 11 August 2020 இம் மூலத்தில் இருந்து 13 ஜூன் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210613151647/https://ceylontoday.lk/news/national-list-members-of-aitc-itak-gazetted. பார்த்த நாள்: 8 September 2020. 
  9. "SLPP, ITAK & ACTC National List MPs announced via Extraordinary Gazette". நியூஸ் பெர்ஸ்ட் (Colombo, Sri Lanka). 10 August 2020. https://www.newsfirst.lk/2020/08/10/slpp-itak-actc-national-list-mps-announced-via-extraordinary-gazette/. பார்த்த நாள்: 8 September 2020. 
  10. "Ampara preferences". Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 10 இம் மூலத்தில் இருந்து 29 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140429080352/http://www.slelections.gov.lk/pdf/ele_2012/Candidates/Ampara%20preference.pdf. 
"https://tamilar.wiki/index.php?title=தவராசா_கலையரசன்&oldid=24288" இருந்து மீள்விக்கப்பட்டது