தலைவா
தலைவா (Thalaivaa) என்பது ஆகத்து 2013 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும்.[3][4] ஏ. எல். விஜய் இயக்கத்தில் சந்திர பிரகாஷ் ஜெயின் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் நடித்துள்ளார். அவருக்கு இணையாக அமலா பாலும் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்தியராஜும், மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசை ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்து இருக்கிறார்.
தலைவா | |
---|---|
இயக்கம் | ஏ. எல். விஜய் |
தயாரிப்பு | சந்திர பிரகாஷ் ஜெயின் |
கதை | ஏ. எல். விஜய் |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | அந்தோணி |
கலையகம் | ஸ்ரீ மிஸ்ரி புரொடக்சன்சு |
வெளியீடு | ஆகத்து 9, 2013 ஆகத்து 20, 2013 (தமிழகம், புதுவை) | (தமிழகம், புதுவை தவிர)
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹60 கோடி[1] |
மொத்த வருவாய் | மதிப்பீடு.₹77 கோடி[2] |
நடிகர்கள்
- விஜய்
- அமலா பால்
- அந்தோணி பிரதீப்
- சத்யராஜ்
- ராஜீவ் பிள்ளை
- அபிமன்யு சிங்
- சந்தானம்
- சுரேஷ்
- ராகினி நந்த்வானி
- உதயா
- பொன்வண்ணன்
- தம்பி ராமையா
- சுப்பு பஞ்சு
- மனோபாலா
- சத்ய மூர்த்தி
கதை
படத்தின் முதல் பாதியின் பெரும்பகுதியின் கதைக்களம் ஆசுத்திரேலியா, பிற்பகுதி மும்பாயில் நடைபெறுகிறது. மும்பாயில் தமிழர்களின் தலைவனும், மக்களுக்கு நல்லது செய்யும் தாதாவுமாக இருப்பவர் "அண்ணா". தனது முடிவு தாயை இழந்த தனது விஸ்வாவைப் பாதிக்காது இருப்பதற்காகக் குழந்தையாக இருக்கும்போதே அவனை ஆசுத்திரேலியாவுக்கு அனுப்பிவிடுகிறார். பொலீசும், அண்ணாவின் எதிரிகளும் அவரைப் பிடிக்க முயன்றும் முடியாத நிலையில், வளர்ந்து இளைஞனாக இருந்த விஸ்வாவைத் தந்திரமாக இந்தியாவுக்கு அழைத்துவந்து அவனைப் பயன்படுத்தி "அண்ணா"வைப் பிடித்துக் கொன்றுவிடுகிறார்கள். பின்னர், தந்தையின் பொறுப்பைத் தான் ஏற்றுக்கொள்ளும் விஸ்வா எதிரிகளை அழிப்பதுடன், தந்தையின் பாதையிலேயே செல்வதுதான் கதை.
பாடல்கள்
இப்படத்தின் இசையை ஜி. வி. பிரகாஷ் குமார் அமைத்திருக்கிறார்.[5]
வெளியீடு
தலைவா திரைப்படத்தின் அமெரிக்க மற்றும் கனடா வெளியீடு உரிமையை பரத் கிரியேசன்ஸ் கைப்பற்றியது [6]. ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளிநாடுகளில் தலைவா படத்தை வெளியிடுகிறது [7]. சன் டிவி ஒலிபரப்பு உரிமையை பெற்று உள்ளது [8]
வெளியீட்டில் சிக்கல்
இப்படம் உலகம் முழுவதும் ஆகத்து 9 அன்று வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் தமிழகத்திலும், புதுவையிலும் வெளியிடப்படாமல் மற்ற மாநிலங்களிலும் நாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.[9] சென்னையில் இத்திரைப்படத்தை திரையிட இருந்த திரையரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் திரையரங்கு உரிமையாளர்கள் இப்படத்தை தகுந்த பாதுகாப்பு கிடைக்கும் வரை திரையிட மறுத்துவிட்டார்கள். அதனால் இப்படம் தமிழகத்தில் ஆகத்து 9 அன்று வெளியாகவில்லை.[10] தலைவா படம் தமிழகம், புதுவையில் 20ந் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது[11][12]
மேற்கோள்கள்
- ↑ "Film industry-politics link: After Kamal Haasan's Vishwaroopam, Vijay starrer-Thalaivaa faces delay" இம் மூலத்தில் இருந்து 23 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201123193551/https://m.economictimes.com/.
- ↑ "Thalaivaa Total Box Office Collections". https://tamil.cinemaprofile.com/movie-boxoffice/thalaivaa-movie.html.
- ↑ "'Thalaivaa' Box Office Collection: Has Vijay Starrer Earned ₹144 Crore at BO?". International Business Times. 23 August 2013 இம் மூலத்தில் இருந்து 16 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191116002224/https://www.ibtimes.co.in/039thalaivaa039-box-office-collection-has-vijay-starrer-earned-144-crore-at-bo-501131.
- ↑ "Thalaivaa - Time To Lead". British Board of Film Classification இம் மூலத்தில் இருந்து 16 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201116091638/https://www.bbfc.co.uk/release/thalaivaa-time-to-lead-q29sbgvjdglvbjpwwc0znzmwntu.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-05-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130502231003/http://www.kollytalk.com/cinenews/vijays-thalaivaa-to-release-in-june-on-his-birthday-93399.html.
- ↑ "Thalaivaa snapped by Bharath Creations!". The Times of India. 5 March 2013. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Thalaivaa-snapped-by-Bharath-Creations/articleshow/18807791.cms. பார்த்த நாள்: 5 March 2013.
- ↑ "the overseas rights for Thalaivaa.!". Ayngaran. https://twitter.com/Ayngaran_Intl/status/311881400041226240. பார்த்த நாள்: 13 March 2013.
- ↑ "Vijay to connect with Sun TV?". Behindwoods. http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/vijay-to-connect-with-sun-tv-vijay-ilayathalapathy-vijay-05-03-13.html. பார்த்த நாள்: 5 March 2013.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-08-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130813171308/http://cinema.vikatan.com/articles/news/28/1965.
- ↑ திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: "தலைவா' பட வெளியீடு ஒத்திவைப்பு
- ↑ நாளை திரைக்கு வருகிறது "தலைவா'
- ↑ "தமிழக முதல்வருக்கு நன்றி! - 'தலைவா' விஜய் அறிக்கை" இம் மூலத்தில் இருந்து 2013-08-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130822054456/http://cinema.vikatan.com/articles/news/28/2021.