தர்க்க பரிபாடை
தர்க்க பரிபாடை [1] என்னும் பெயரில் தமிழில் ஒரு நூல் இருந்தது. இது ஒரு அளவை நூல். வினாவிடைப் பாங்கில் இந்த நூல் இருந்தது என்பதை நூலின் பெயரால் உணரமுடிகிறது. நூலின் காலம் 16 ஆம் நூற்றாண்டு.
- ... மேற்கோள் ஏது உபநயம்
- திகமனம் எனமுறை நிகழப் பெறுமே
என்றிருந்த இந்த நூலின் பகுதியைச் சிவஞான சித்தியார் உரையில் மறைஞான சம்பந்தர் எடுத்துக்காட்டுகிறார். மேலும் இந்த நூலின் ஆசிரியர் காலிங்கராயர் எனவும் அந்த உரை குறிப்பிடுகிறது. [2]
கருவிநூல்
மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005