தருமர் (உரையாசிரியர்)

தருமர் 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நூல் உரையாசிரியர்களில் ஒருவர். திருக்குறள், நாலடியார் பாடல்களுக்கு இவர் உரை எழுதியுள்ளார்.

திருக்குறளில் “இருள்சேர் இருவினையும் சேரா”, “பொறிவாயில் ஐந்தவித்தான்” ஆகிய இரண்டு குறட்பாக்களுக்கு மட்டும்[தெளிவுபடுத்துக (தட்டுப்பிழையோ?)] தமிழ்ப்பொழில் மாத இதழிலும், பிற பதிப்புகளிலும் வெளியாகியுள்ளன.

நாலடியார் பாடல்கள் 400-க்கும் இவரது உரை உள்ளது.

  • இவரது உரை பதுமனார் உரையைத் தழுவிச் செல்லும் பாங்கு இவரைப் பதுமனாரின் மாணாக்கர் எனக் கொள்ள வைக்கிறது.
  • இவரது உரையில் காணப்படும் பாடல் ஒன்று இவரைத் "தண்டார்ப் பொறைத் தருமன்" எனக் குறிப்பிடுகிறது.
  • இவரது உரைக்கு இவர் எழுதியுள்ள விநாயகர் வணக்கப் பாடல் 12ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடல் 'பாலும் தெளிதேனும்' என்னும் பாடல் போல் அமைந்துள்ளதால் இவரது காலம் 13ஆம் நூற்றாண்டு எனல் பொருத்தமாகிறது.
  • இவர் நாலடியார் நூலைப் பகுப்பு செய்துள்ள பாங்கை இந்த உரைநூலுக்கு எழுதப்பட்டுள்ள பாயிரப் பாடல் குறிப்பிடுகிறது.
    • அறவியல் 13
    • அரசர்க்கு உரிய பொருளியல் 24
    • இன்பத்துப் பால் 3
  • இவரது உரையில் வடமொழித் தொடர் வருகிறது.[1]
  • இவர் சீவக சிந்தாமணி பாடல் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார்.[2]

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. யதீனாம் கோபி சண்டாளி
  2. பாடல் 328
"https://tamilar.wiki/index.php?title=தருமர்_(உரையாசிரியர்)&oldid=15977" இருந்து மீள்விக்கப்பட்டது