தமிழ் மாநில காங்கிரசு
தமிழ் மாநில காங்கிரசு (சுருக்கமாக : தமாகா Tamil Maanila Congress) அல்லது மூப்பனார் காங்கிரஸ் என்று அழைக்கப்படும். இக்கட்சியானது 1996 ஆம் ஆண்டு அன்றைய தமிழக காங்கிரசுக் கட்சியின் முன்னணி மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி. கே. மூப்பனார் அவர்களால் ஆரம்பிக்கபட்ட அரசியல் கட்சியாகும். இதன் தேர்தல் சின்னம் மிதிவண்டி (சைக்கிள்) ஆகும். 2001ல் இக்கட்சியின் தலைவர் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாகா தலைவரானார். பின்பு 2002ல் அன்றைய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று கொண்டு தமாகாவை இந்திய தேசியக் காங்கிரசுடன் இணைத்து விட்டார்.[1]இக்கட்சி மீண்டும் 2014ல் ஜி.கே.வாசனால் மறுதொடக்கம் செய்யப்பட்டது.
வரலாறு
- 1996 சட்டமன்ற/நாடாளுமன்றத் தேர்தலில் அன்றைய இந்திய பிரதமரும், காங்கிரசுக் கட்சியின் தேசிய தலைவருமான பி. வி. நரசிம்ம ராவ் ஜெயலலிதாவின் அதிமுகவுடன் காங்கிரசுக் கட்சி கூட்டணி தொடரும் என அறிவித்தனர்.
- அதனால் தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களில் பெரும்பாலானோர் அதிமுகவில் ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியை சட்டமன்றத்தில் எதிர்கட்சியை போல் நடத்தி வந்ததாலும் ஜெயலலிதா தமிழக காங்கிரஸ் தலைவர்களை அவமதித்து பேசிவந்ததாலும் காங்கிரசு உறுப்பினர்கள் அனைவரும் மிகவும் அதிருப்தி அடைந்த நிலையில் எதிர் கட்சியான திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவேண்டும். என நரசிம்மராவிடம் கேரிக்கை விடுத்தனர்.
- ஆனால் அதற்கு முந்தைய (1989–1991) திமுக முதல்வர் மு. கருணாநிதி ஆட்சியை ஈழத்தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆதரவை வைத்து 1991ல் அநியாயமாக திமுக ஆட்சியை அன்றைய பிரதமர் சந்திரசேகர் மூலம் காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி கலைத்தார்.
- அதனால் கோபமடைந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அக்கட்சியினர் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை திமுகவினரால் தாக்கப்பட்டனர். குறிப்பாக திமுக ஆட்சி கலைக்கபட காரணமாக இருந்த ராஜீவ் காந்தி கொடும்பாவிகளை எறித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
- அதன் தொடர்ச்சியாக அப்போது தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு நடந்த நாடாளுமன்ற/சட்டமன்றத் தேர்தலின் போது பிரச்சாரம் செய்ய வந்த தலைவர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைக்கு திமுகவின் தலைவரும் அன்றைய முன்னாள் முதல்வருமான கருணாநிதி உதவினார். என்ற காரணத்தால் திமுகவிடம் கடுமையான எதிர்ப்பை காட்டிய அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்த சோனியா காந்தி மற்றும் பிரதமர் நரசிம்ம ராவ் திமுகவுடன் கூட்டணிக்கு உடன்படாமல் தொடர்ந்து அதிமுக-காங்கிரஸ் கூட்டணி அமையும் என்று கூறினார்.
- அதை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் சோனியா காந்தியின் உருவ கொடும்பாவி பொம்மைகள் எறிக்கப்பட்டது.
- அதன் பிறகு அக்கூட்டணியை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் ஒரு பிரிவினர்கள் மற்றும் சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஜி. கே. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார்.
- பின்பு நடந்த 1996 சட்டமன்ற/நாடளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி ஆனது பத்திரிகை நிருபர் சோ இராமசாமி அவர்கள் சிபாரிசால் அமைந்தது.[சான்று தேவை]
- இக்கூட்டணிக்கு சோ இராமசாமியின் வேண்டுகோளை ஏற்று அவரது நண்பர் நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு பிரச்சாரம் செய்தார். கருணாநிதி, ஜி. கே. மூப்பனார் திமுக தலைமையிலான கூட்டணியில் தமாகா போட்டியிட்டு பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர்.[சான்று தேவை]
தேர்தல் வரலாறு
- தமாகா 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு. 39 இடங்களில் வெற்றி பெற்றது. இத்தேர்தலுடன் நடந்த 1996 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் இணைந்து போட்டியிட்டு 20 இடங்களில் வென்றது.
- 1996 நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜகவில் ஆட்சி அமைக்க தேவையான அறுதிபெரும்பான்மை இல்லாமல் போனதால் வாஜ்பாய் பிரதமர் பதவியில் 13 நாட்களில் விலகினார்.
- இதை அடுத்த அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணிக்கு காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளிக்க தமிழகத்தில் திமுக–தமாகா ஆட்சிக்கு ஆதரவளித்தது.
- ஜனதா தளம் கட்சியில் பிரதமர் தேவ கவுடா அமைச்சரவையில் திமுக–தமாகா மந்திரி பதவியில் பங்கெடுத்து கொண்டது. இக்கட்சியின் சார்பில் முரசொலி மாறன், டி. ஆர். பாலு, ஆ. ராசா, ப. சிதம்பரம், எம். அருணாச்சலம், தனுஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாகப் பணியாற்றினர்.
- பின்பு ஜனதா தளம் கட்சியில் தேவ கவுடாவை ஐக்கிய முன்னணிக்கு வெளியில் இருந்த ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சியின் அன்றைய தலைவர் சீதாராமன் கேசரி பிரதமர் பதவியில் இருந்து விலக கொரியதையடுத்து.
- ஜனதா தளம் கட்சியின் மற்றோரு மூத்த தலைவர்களில் ஒருவரான ஐ. கே. குஜ்ரால் 1997ல் பிரதமர் ஆன போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணத்தை குறிப்பிடும் ஜெயின் கமிஷன் வெளிவந்ததை அடுத்து அதில் ராஜீவ் காந்தி மரணத்திற்கு காரணமான விடுதலைப் புலிகள் தற்கொலை படைக்கு திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் உதவினார். என்ற காரணம் குறிப்பிடபட்டு இருந்ததால்.
- அதை காரணம் காட்டி ஐக்கிய முன்னணி கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வந்த காங்கிரஸ் தலைவர்களான சீதாராமன் கேசரி மற்றும் சோனியா காந்தி ஐக்கிய முன்னணி அமைச்சரவையில் இருந்து தமிழகத்தை சேர்ந்த திமுக அரசு வெளியேற்றபடவேண்டும் என்று கூறினார்.
- ஆனால் பிரதமர் ஐ. கே. குஜ்ரால் திமுக அரசை வெளியேற்ற மறுத்ததால். காங்கிரஸ் ஐக்கிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் 1998ல் ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்தது.
- 1998 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக-தமாகா கூட்டணி தொடர்ந்த போது போட்டியிட்ட 3 இடங்களில் மட்டுமே தமாகா வென்றது.
- அதன் பிறகு மத்தியில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுகவில் ஜெயலலிதா விலக்கிக் கொண்டதால் மத்தியில் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி 13 மாதங்களில் கவிழ்ந்ததால்.
- அதையடுத்து வாஜ்பாய் அரசுக்கு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக-பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால்.
- 1999 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-பாஜகவுடன் கூட்டணி இணைந்ததால் திமுக-தமாகா கூட்டணி முறிந்தது.
- 1999 நாடாளுமன்றத் தேர்தலில் தமாகாவுடன், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு. அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
- 2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தமாகா கூட்டணியில் இடம்பெற்று 32 தொகுதியில் போட்டியிட்டு 23 இடங்களில் வென்றது.
- 2001ல் மூப்பனாரின் மறைவுக்குப் பின் அவரது மகன் ஜி. கே. வாசன் தமாகா தலைவரானார். 2002ல் தனது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்பட்டது.
மறுதொடக்கம்
- 2002 ஆண்டில் காங்கிரஸ் உடன் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததையடுத்து. அத்தேர்தலில் பிரதமர் வேட்பாளரான ராகுல் காந்தியின் வாரிசு அரசியலை எதிர்த்து காங்கிரசில் இருந்து விலகி மீண்டும் ஜி. கே. வாசன் தனது தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மறுதொடக்கம் செய்தார்.
மறுதொடக்கத்தில் சந்தித்த தேர்தல்
- 2016 சட்டமன்ற தேர்தலில் தமாகா தலைவர் ஜி. கே. வாசன் அவர்கள் அதிமுகவில் ஜெயலலிதாவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது போட்டியிடும் தொகுதியில் அக்கட்சியின் தேர்தல் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும். என்ற நிபந்தனையால் அக்கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து.
- பின்பு வைகோ அவர்களின் தலைமையில் அமைந்த மக்கள் நலக் கூட்டணியுடன் தமிழ் மாநில காங்கிரசு இணைந்தது. அணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த்க்கு ஆதரவு கொடுத்த ஜி. கே. வாசன் இத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து தமாகாவும் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது.
- 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழநிசாமி அவர்களின் அதிமுக-பாஜகவின் தலைமையிலான தேஜகூவில் தமாகா இடம் பெற்றிருந்தது. இம்முறை ஜி. கே. வாசன் தனது தஞ்சாவூர் தொகுதியில் மக்களவை உறுப்பினர் ஆக தமாகா சார்பில் என்.ஆர்.நடராஜன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இம்முறை அதிமுக-பாஜக கூட்டணியில் மோடி அமைச்சரவையில் ஜி.கே.வாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கொடுத்து கௌரவபடுத்தியது.
- 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் மீண்டும் அதிமுக ஆட்சியில் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடர்ந்து வெற்றி பெற்று முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆதரவாக பிரச்சாரம் செய்த அவர். எதிர்கட்சி திமுகவையும் அக்கட்சியின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்று இருந்த எதிரணிகட்சிகளை பலமாக விமர்சித்து எதிர்த்து பிரச்சாரம் செய்தார். இம்முறை அதிமுக-பாஜக தலைமையிலான தேஜகூட்டணியில் தமாகாவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதிமுகவின் அதிகார பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
- பின்பு தமாகா கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட 6 தொகுதிகளில் ஒன்றான ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட யுவராஜ் சுமார் 8000 வாக்கு வித்யாசத்தில் தோற்று எதிரணியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா இருதய வலியால் 2023ல் தீடிரென இறந்து போக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மீண்டும் தமாகா சார்பில் தலைவர் ஜி. கே. வாசன் யுவராஜ் அவர்களை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட களமிறக்கினார்.
- அதற்கு அப்போது அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தனது கூட்டணி கட்சி வேட்பாளருக்கு முழுமையான ஆதரவை தெறிவித்த போதிலும் அப்போது அதிமுக கூட்டணியிலிருந்த மற்றோரு கூட்டணி கட்சியான பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் தமாகா தலைவர் ஜி.கே.வாசனிடம் பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுமாறு கூறியதையடுத்து ஜி. கே. வாசன் அதற்கு உடன்படாமல் முழுமையாக ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் விலகினார்.
- பின்பு அத்தேர்தலில் அதிமுக சார்பில் கே. எஸ். தென்னரசு களமிறக்கபட்டு ஜி. கே. வாசன் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
- ஆனால் தேர்தல் முடிவில் எதிரணியில் ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த திருமகன் ஈவெரா அவர்களின் தந்தையும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் போட்டியிட்டு மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற அதிமுக வேட்பாளர் கே. எஸ். தென்னரசு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தேர்தல் நிலவரம்
ஆண்டு | பொதுத் தேர்தல் | பெற்ற வாக்குகள் | வென்ற இடங்கள் |
---|---|---|---|
1996 | 11வது தமிழ்நாடு சட்டப்பேரவை | 2,526,474 | 39 |
1996 | 11வது மக்களவை | 7,339,982 | 20 |
1998 | 12வது மக்களவை | 5,169,183 | 3 |
1999 | 13வது மக்களவை | 2,946,899 | 0 |
2001 | 12வது தமிழ்நாடு சட்டப்பேரவை | 1,885,726 | 23 |
2016 | 15வது தமிழ்நாடு சட்டப்பேரவை | 230,710 | 0 |
ஆதாரம்
- ↑ Vikatan Correspondent, ed. (1 நவம்பர் 2014). மூப்பனார் தொடங்கிய த.மா.கா. - ஒரு ப்ளாஷ்பேக்!. விகடன் இதழ்.