தமிழ்விடு தூது

தமிழ்விடு தூது என்பது கலிவெண்பா வடிவில் எழுதப்பட்ட ஒரு தூது வகைத் தமிழ்ச் சிற்றிலக்கியம் ஆகும். இது மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலை கூறிவருமாறு தமிழ் மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது. இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது. இந்த நூலை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை.[1] இதனை முதன் முதலில் 1930 இல் உ. வே. சாமிநாதையர் பதிப்பித்தார்.

மேற்கோள்கள்

  1. தமிழ்விடு தூது, தமிழ் இணையக் கல்விக்கழகம்
"https://tamilar.wiki/index.php?title=தமிழ்விடு_தூது&oldid=17031" இருந்து மீள்விக்கப்பட்டது