தமிழ்நதி
தமிழ்நதி | |
---|---|
முழுப்பெயர் | கலைவாணி |
இராஜகுமாரன் | |
பிறப்பு | 15-08-1966 |
பிறந்த இடம் | அன்புவழிபுரம், |
திருகோணமலை | |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | செல்வரட்ணம் |
சிவபாக்கியம் |
கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்நதி, ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து தமிழ் பெண்எழுத்தாளர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். ஈழத்தின் அரசியல் சிக்கல் காரணமாக 1992இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். 1996ஆம் ஆண்டிலிருந்து சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சில பாடல்களும் எழுதியுள்ளார். ஓரிடத்தில் தரியாது, ரொறன்ரோ-தமிழகம்-ஈழம் என மூன்று இடங்களிலும் விரும்பி வாழ்ந்து வருகிறார்.
வெளிவந்த நூல்கள்
- நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்)
- சூரியன் தனித்தலையும் பகல் (கவிதைகள், ஆகஸ்ட் 2007, பனிக்குடம் பதிப்பகம்)
- இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்)
- கானல் வரி (குறுநாவல்)
- ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம் (கட்டுரைகள்)
- பார்த்தீனியம் (நாவல், 2016)
- மாயக்குதிரை (சிறுகதைகள்)