தமிழர் விளையாட்டுகள்
தமிழர்களால் வழிவழியாக விளையாடப்பட்டு வந்த விளையாட்டுக்கள், அல்லது பரவலாக விளையாடப்படும் விளையாட்டுக்கள் தமிழர் விளையாட்டுகள் ஆகும். இதில் பல விளையாட்டுக்கள் தென்னிந்தியாவில் பரவலாக விளையாடப்படுபவை. மேலும் பல உலகமெங்கும் விளையாடப்படுபவை. மட்டைப்பந்து, உதைப்பந்து என தெளிவாக வெளி நாடுகளில் தோன்றிய அனைத்துலக விளையாட்டுக்கள் தமிழர் விளையாட்டுக்களுக்குள் வகைப்படுத்தபடவில்லை. இவற்றை பல்வேறு பண்புகளின் அடிப்படைகளில் வகைப்படுத்தலாம்.
தொன்மகால விளையாட்டுக்கள்
- புனல் விளையாட்டு [1] பரணிடப்பட்டது 2010-09-28 at the வந்தவழி இயந்திரம்
- பொழில் விளையாட்டு
- பந்தாட்டம் (விளையாட்டு) [2] பரணிடப்பட்டது 2009-06-23 at the வந்தவழி இயந்திரம்
- மல்லாடல்
- கழைக்கூத்து
- வல்லாட்டம்
தற்காப்பு/ஆடற் கலைகள்
வெளிக்கள விளையாட்டுக்கள்
- ஓணப்பந்து விளையாட்டு
- கிட்டிப் புள்ளு
- கிளித்தட்டு, தாச்சி
- சடுகுடு/கபடி
- எட்டுக்கோடு
- வழுக்கு மரம் ஏறுதல்
- கயிறு இழுத்தல்
- முட்டி உடைத்தல்/உறியடி
- பாரிவேட்டை [3][தொடர்பிழந்த இணைப்பு]
- சங்கீதக் கதிரை
- கிளி கோடு பாய்தல்
- போர்த்தேங்காய்
- பல்லாங்குழி
- ஒப்பு
- இரட்டை மாட்டுப் பந்தயம்
- மோடி விளையாட்டு
- கண்ணாமூச்சி (Hide & Seek)
- குழை எடு
- பேணி அடித்தல், பேணிப்பந்து, தகரப்பந்து
- அம்பெறிதல்
- கோழிச்சண்டை
- வண்டிச்சவாரி
- சில்லிக்கோடு
- இளவட்டக் கல்
- கீச்சு மச்சுத் தம்பலம்
- போளையடி
- வெள்ளமடித்தல்
- சிற்றில், வீடு கட்டி விளையாடுதல்
- கயிறடித்தல்
- கப்பல் விடுதல், தோணி விடுதல்
- குலை குலையாய் முந்திரிக்காய்
- தேர்கட்டி விளையாட்டு
- உப்பு மூட்டை
- எறி பந்து
- தும்பி விளையாட்டு
- தொப்ப விளையாட்டு
- எல்லே எல்லே
- ஆடு வீடு
- ஊஞ்சல்
- தணையடி அடி
- புளியடி புளியடி
- ஒப்பு விளையாட்டு
- மரமேறல்
- நீந்தல்
- ஆறுதல் ஈருருளி ஓட்டம்
- சாக்கு ஓட்டம்
- புளிச்சல்
- தலையணைச் சண்டை
- கள்ளன் காவலன்
- பச்சைக் குதிரை
- காற்றாடி
- எலியும் பூனையும்
- தட்டா மாலை
- சில்லுக் கோடு
- கொழுக்கட்டை
- பட்டம்
- பூசணிக்காய் (விளையாட்டு)
- ஓடிப் பிடித்தல்/அடிச்சுப் பிடித்தல்
- ஒளித்துப் பிடித்தல்
- கண்கட்டிப் பிடித்தல்/கண் பொத்தி விளையாட்டு
- கண்கட்டி ஓட்டம்
- கயிறு பாய்தல்
- சமநிலை பேணுதல்
- கிடுகு பின்னுதல்
- ஊசி நூல் கோர்த்தல்
- மரம் ஏறுதல்
- தேங்காய் துருவுதல்
- தட்டாங்கல்
- பாட்டி பேத்தி
- அல்லி மல்லி தாமரை
- வீடு கட்டல்
- வளையல் விளையாட்டு
- ஊஞ்சல்
- சோளக்கதிர்
- சிறுவீடு
- குத்து விளையாட்டு
- குண்டு விளையாட்டு
- வண்டியுருட்டுதல்
- பூச்சி விளையாட்டு
- மரங்கொத்தி (விளையாட்டு)
உள்ளக விளையாட்டுக்கள்
- தாயக் கட்டை
- சொக்கட்டான்
- கொக்கான்
- பல்லாங்குழி
- ஆடும் புலியும்
- பாம்பும் ஏணியும்
- பாண்டி
- பம்பரம்
- ஆடுபுலி ஆட்டம்
- மூன்றுகல் ஆட்டம்
- செப்புசாமான்
- உப்புத் தூக்கல்
- கூட்டாஞ்சோறாக்கல்
- தத்தைக்கா..
- சங்கு சக்கரம்
- பருப்புக்கட
- கிச்சு கிச்சு தாம்பலம்
- ஒத்தையா, ரெட்டையா/கைத் துடுப்பாட்டம்
- கரகர வண்டி
- சீதைப் பாண்டி
- ஒருகுடம் தண்ணி ஊத்தி
- குலைகுலையா முந்திரிக்காய்
- கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை
- நொண்டி
ஆடவர் விளையாட்டுகள்
ஆடவர் விளையாட்டுகள் பெரும்பாலும் புறவிளையாட்டுகளாகவே (outdoor games) உள்ளன.
- ஜல்லிக்கட்டு
- பாரிவேட்டை
- சிலம்பம்
- புலிவேடம்
- சடுகுடு
- இளவட்டக்கல்
- ஓட்டம்
- இரட்டை மாட்டுப் பந்தயம்
- மோடி விளையாட்டு
- உரிமரம் ஏறுதல்
- பானை உடைத்தல்
- உறிப்பானை விளையாட்டு
- சூதுதாயம்
- வாய்ப்புநிலை விளையாட்டுகள்
- அறிவுத் திறன் விளையாட்டுகள்
இவை ஆகியன ஆடவர் விரும்பி ஆடும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.
மகளிர் விளையாட்டுகள்
மகளிர் விளையாட்டுகள் பெரும்பாலும் அக விளையாட்டுகளாகவே (Indoor games) உள்ளன.
இவை பொதுவாக மகளிர் பங்கேற்கும் முக்கிய விளையாட்டுகளாகும்.
சிறுவர் சிறுமியர் விளையாட்டுகள்
எலியும் பூனையும், சோளக்கதிர், சிறுவீடு, குலைகுலையாய் முந்திரிக்காய் ஆகியன சிறுவர் சிறுமியர் சேர்ந்து பங்கு கொள்ளும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.
சிறுவர் விளையாட்டுகள்
கிட்டிப்புள், குத்து விளையாட்டு, பச்சைக் குதிரை, குத்துப் பம்பரம், குண்டு விளையாட்டு, எறிபந்து, காற்றாடி, பட்டம், வண்டியுருட்டுதல், பூச்சி விளையாட்டு, மரங்கொத்தி முதலியன சிறுவரின் முக்கிய விளையாட்டுகளாகும்.
சிறுமியர் விளையாட்டுகள்
சில்லி, சோற்றுப்பானை, கும்மி, திரிதிரி, கண்கட்டி விளையாடுதல், மலையிலே தீப்பிடிக்குது, தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல் முதலியன சிறுமியரின் முக்கிய விளையாட்டுகளாகும்.
குழந்தை விளையாட்டுகள்
உச்சரிப்பு விளையாட்டு, வினா விடைச் சங்கிலி, பருப்புக் கடைதல் ஆகியன கிராமபுற குழந்தைகள் பங்கு பெறும் முக்கிய விளையாட்டுகள் ஆகும்.
விளையாட்டு வகைகள்
புனல் விளையாட்டு
நீரில் விளையாடுவது. சில தருணம் நீரில் அடித்துச் செல்லப்படும் தலைவியை தலைவன் காப்பாற்றுவதும் இதில் அடங்கும்.
பந்து
பழங்காலத்தில் ஆண்கள் தேங்காய் நார் , பஞ்சு , சிறிய அளவிலான இரும்பு களிமண் முதலியவற்றில் ஆடினர். பெண்கள் பூக்களைக் கொண்டு ஆடினர். குதிரையில் பயணம் செய்தும் பந்து விளையாடினர். இப்போது விளையாடும் போலோ என்கிற விளையாட்டு இந்த வகையைச் சார்ந்தது.
அசதியாடல்
ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்து விளையாடுவது
அம்மானை
பெண்கள் குழுக்களாக வினா, விடைகளை பாடல்களாகப் பாடப்படுவது அம்மானை. பாடலின் முடிவில் அம்மானை என்ற சொல் இடம் பெற வேண்டும்.
ஊஞ்சல்
ஊஞ்சல் விளையாட்டு. ஆலம் விழுது முதல் அம்பொன் வரை விளையாட்டுக் கருவிகளாக பயன்பட்டன.
கழங்கு
ஒரு காயைத் தூக்கி போட்டு பிடித்தாடும் ஆட்டம். புளியங்காய், சிறு கற்கள் முதலியன கொண்டு ஆடப்படுவது. ===== # தலைப்பு
- கூழாங்கற்களைத்தூக்கி போட்டு பிடித்தாடும் ஆட்டம் 5,7,9,11 கற்களை பயனபடுத்துவர்.=====
கண் புதைந்து ஆடுதல்
இன்று கண்ணாமூச்சி என்று இவ்விளையாட்டு அழைக்கப்படுகிறது
கறங்கு
கறங்கு என்றால் சுழற்சி. பனை ஓலையை சீவி வெட்டி காற்றாடி போல செய்து காற்று வரும் திசையை நோக்கி ஓடினால் விசிறியைப் போல சுழற்றிக் கொண்டு விளையாடுவது.
குரவை
பெண்கள் வட்டமாக கை கோர்த்து பாடி ஆடுவது
சிறு சோறாக்கல்
கூட்டாஞ் சோறு ஆக்கல்
சிற்றில் செய்தல்
கடல் அல்லது ஆற்று மணலில் வீடு கட்டி விளையாடுதல்
வட்டு
பொருளை உருட்டி விளையாடும் ஆட்டம் ( தாயம் போல)
ஏறுகோள்
ஜல்லிக்கட்டு
வள்ளை
உரலில் ஒரு பொருளைக் குத்திக் கொண்டு பாடும் ஒரு விளையாட்டு
சதவி
பட்டம் விளையாடுதல் போன்ற ஒரு விளையாட்டடு
தமிழ் குழந்தை விளையாட்டுக்கள்
நூல்கள்
இவற்றையும் பார்க்க
உசாத்துணைகள்
- கி. விசாகரூபன். (2004). நாட்டார் வழக்காற்றியல். யாழ்ப்பாணம்: மலர் பதிப்பகம்.
- சு.சிவகாமசுந்தரி எழுதிய “சங்க இலக்கிய விளையாட்டுகளஞ்சியம்” நூல் (நியு செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை வெளியீடு)
வெளி இணைப்புகள்
- நாட்டுப்புறக் கலை: விளையாட்டுகள் பரணிடப்பட்டது 2010-09-28 at the வந்தவழி இயந்திரம்
- சிறுமியர் விளையாட்டுக்கள் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- தமிழர்களின் விளையாட்டுகள் மற்றும் தற்காப்பு கலைகள்
- யாழ்ப்பாணத்தில் காணப்படும் பாரம்பரிய விளையாட்டுக்கள்பாரம்பரிய விளையாட்டு
- தமிழர் விளையாட்டுகள்-மாத்தளை சோமு
- தமிழர் பண்பாட்டில் விளையாட்டுகள் - முத்தமிழ் மன்றம்
- தலைமுறை மறக்கும் தமிழ் விளையாட்டுக்கள்
- நாட்டுப்புற விளையாட்டுகள் - வகைப்பாடு
- நாட்டுப்புற விளையாட்டுக்கள்
- மகளிர் விளையாட்டுக்கள்
- ஆடவர் விளையாட்டுக்கள்
- இளையோர் விளையாட்டுக்கள்
- Traditional games given a nitro boost - வார்ப்புரு:அ