தமிழச்சியின் கத்தி (நூல்)
தமிழச்சியின் கத்தி என்பது பாரதிதாசனால் 1949-ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலாகும். இந்நூலை தமிழச்சியின் கதை என்றும் சொல்வதுண்டு. 40 துணைத் தலைப்புகளைக் கொண்டுள்ளது இந்நூல், உணர்ச்சிமயமான கவிதைகளை உள்ளடக்கியது.
தமிழச்சியின் கத்தி முதற்பக்கம் | |
நூலாசிரியர் | பாரதிதாசன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
வகை | கற்பனைக் கவிதைத் தொகுப்பு |
வெளியீட்டாளர் | பாரதிதாசன் பதிப்பகம் மற்றும் பாவை பதிப்பகம் |
வெளியிடப்பட்ட நாள் | 1949 மற்றும் 2009 |
பக்கங்கள் | 107 |
ISBN | 81-7735-773-5 |
கதைச் சுருக்கம்
அக்காலத்தில், ஆற்காடு 172 பாளையப் பட்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. செஞ்சிப் பாளையப்பட்டின் தலைவன், தேசிங்கு; வடக்கன்; தமிழரை இகழ்பவன். சிப்பாய்களிலே சிலருக்கு ஒரு தலைவன் இருப்பான். அவன் சுபேதார். சுதரிசன் சிங்கு ஒரு சுபேதார்; அவனும் அவன் தோழனான மற்றொரு சுபேதார் ரஞ்சித் சிங்கும், புதுச்சேரி சென்று வளவனூர் வழியாக வருகையில், வளவனூர்ப் புறத்துத் தென்னந் தோப்பொன்றில் திம்மனைக் காணுகிறார்கள் என்று இக்கவிதை தொகுப்பு ஆரம்பமாகிறது.
உசாத்துணைகள்
- தமிழகம்.வலை பரணிடப்பட்டது 2013-06-26 at the வந்தவழி இயந்திரம் தளத்தில் மின்னூல் வடிவல் தமிழச்சியின் கத்தி
- மதுரைத் திட்டம் பரணிடப்பட்டது 2012-06-18 at the வந்தவழி இயந்திரம்