டி. எஸ். பொன்னுசாமி
டி. எஸ். பொன்னுசாமி (பிறப்பு: டிசம்பர் 22 1946) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தீப்பொறி எனும் புனைப்பெயரால் நன்கறியப்பட்ட இவர் ஒரு பத்திரிகையாசிரியராவார். தீவிரச் சமுதாயச் சிந்தனையுள்ள கவிஞர். "உயர்வோம்" இதழில் பொறுப்பாசிரியராகவும், பொன் பாவலர் மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
டி. எஸ். பொன்னுசாமி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
டி. எஸ். பொன்னுசாமி |
---|---|
பிறந்ததிகதி | டிசம்பர் 22 1946 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
எழுத்துத் துறை ஈடுபாடு
1965 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலிக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. அதிகமாக இசைப்பாடல்கள் எழுதியுள்ளார், அவை உள்ளூர்ப் பாடகர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளதோடு இசைநாடா, குறுந்தட்டு வடிவங்களும் பெற்றுள்ளன.
நூல்கள்
கவிதைத் தொகுப்புகள்
- "தீப்பொறி";
- "தீப்பொறி இரணடாம் தொகுதி"
- "தீப்பொறியின் உள்ளூர்ப் பாடல்கள்"
- "இந்திய ரயில் பயணங்கள்" (பயணக் கட்டுரை)
- "கோம்பாக் ஆறு"
- "கவியரங்கில் ஒரு கவிஞர்" (கவிதைகள் தொகுப்பு).
பரிசில்களும், விருதுகளும்
- "தீப்பொறி" விருது மலேசியத் திராவிடர் கழகம்
- கூட்டுறவுச் சங்கக் கவிதைப் போட்டி (1998) உட்படப் பல போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளார்.
- டான் ஸ்ரீ ஆதிநாகப்பன் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1983)