டிக் டிக் டிக்
டிக் டிக் டிக் (Tik Tik Tik), 1981 ஆம் ஆண்டு வெளிவந்த குற்றப்புனைவுத் தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மாதவி, ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
டிக் டிக் டிக் | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | ஆர். சி. பிரகாஷ் |
கதை | பாரதிராஜா |
இசை | இளையராஜா |
நடிப்பு | கமல்ஹாசன் மாதவி ராதா ஸ்வப்னா |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
படத்தொகுப்பு | கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் |
நடனம் | ரகு |
கலையகம் | சிவசக்தி பிலிம்ஸ் |
விநியோகம் | சிவசக்தி பிலிம்ஸ் |
வெளியீடு | 26/10/1981 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இந்தியில் இப்படம் இயக்குநர் ஐ. வி. சசி இயக்கத்தில் 'கரிசுமா' என்ற பெயரில் 1984 ஆண்டு மீண்டும் உருவாக்கப்பட்டு வெளிவந்தது. அத்திரைபடத்தில் கமல் ரீனா ராய், தீனா அம்பானி நடித்தனர்.
நடிகர்கள்
- கமல்ஹாசன் - திலீப்
- மாதவி - சாரதா
- ராதா - ராதா
- ஸ்வப்ணா - ஸ்வப்ணா
- தியாகராஜன் - விக்டர்
- சாமசுந்தர் எல். அஸ்ராணி - ஓபராய்
- தேங்காய் சீனிவாசன் - லட்சுமி நாராயணன்
- வி. கே. ராமசாமி - சாரதாவின் தந்தை
- நிஷா நூர் - நிஷா
- மனோபாலா
- ஒய். ஜி. பார்த்தசாரதி
- சரிகா - மிஸ்.இந்தியா செர்லெ (சிறப்பு தோற்றம்)
பாடல்கள்
இளையராஜா அவர்கள் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன் மற்றும் வைரமுத்து எழுதியுள்ளனர். "இது ஒரு நிலாகாலம்" மற்றும் "பூ மலர்ந்திட" ஆகிய பாடல் வைரமுத்து எழுதினார்.
எண். | பாடல் | பாடகர்கள் |
1 | "இது ஒரு நிலா காலம்" | எஸ். ஜானகி |
2 | "நேற்று இந்த நேரம்" | லதா ரஜினிகாந்த் |
3 | "பூ மலர்ந்திட" | கே. ஜே. யேசுதாஸ், ஜென்சி அந்தோனி |