டான் மேக்ஸ் (படத் தொகுப்பாளர்)

டான் மேக்ஸ் என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், படத் தொகுப்பாளர் ஆவார், இவர் முதன்மையாக மலையாளம், தமிழ், தெலுங்கு மொழி படங்களில் பணியாற்றுகிறார். மலையாள திரைப்படத் துறையில் முன்னணி சமகால திரைப்பட தொகுப்பாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார், மேலும் பிராந்திய படங்களில் பல புதிய படத் தொகுப்பு நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். [1]

டான் மேக்ஸ்
பிறப்பு16 நவம்பர் 1980 (1980-11-16) (அகவை 44)
இந்திய ஒன்றியம், கேரளம், கோட்டயம், அனிச்சகாடு
பணிதிரைப்பட இயக்குநர், படத்தொகுப்பாளர்

ஆரம்ப கால வாழ்க்கை

டான் மேக்ஸ் 1980 நவம்பர் 16 ஆம் தேதி கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தின் முண்டகாயத்தில் எஸ்.பி.டி.யின் முன்னாள் வங்கி மேலாளரான கே. எல். வர்கீஸ் மற்றும் அனிக்காட்டில் உள்ள செயின்ட் தாமஸ் உயர்நிலைப் பள்ளியில் மலையாள ஆசிரியராக இருந்த டி. வி. சினம்மா ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார் . மலையாள அதிரடி நட்சத்திரம் ஜெயன் இறந்த அதே நாளில் இவர் பிறந்தார். தனது முதல் ஏழு ஆண்டுகளை இடுகி மாவட்டத்தில் கழித்த பின்னர், இவரது குடும்பம் அனிக்காட்டின் பல்லிகாதோடிற்கு இடம் பெயர்ந்தது. அனிகாட்டின் செயின்ட் தாமஸில் படித்தார். பின்னர் இவர் தனது முன் பட்டப்படிப்பை கஞ்சிராப்பிலியில் உள்ள செயின்ட் டொமினிக் கல்லூரியில் பயின்றார் . பின்னர் பெங்களூரில் உள்ள அரினா அனிமேஷனில் மல்டிமீடியா மற்றும் அனிமேஷனில் பட்டயப் படிப்பை படித்தார் மேலும் கலவை மற்றும் அனிமேஷனில் நிபுணத்துவம் பெற்றார்.

தொழில்

விளம்பரத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் படத்தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய டான் ஆரம்பத்தில் அனிமேஷனில் கவனம் செலுத்தினார், இவர் கேதன் மேத்தாவின் நிறுவனத்தில் சேர்ந்தார், பின்னர் துபாயில் உள்ள பிரைம் டைம் அலைவரிசையில் பணியாற்றினார், மலையாள அலைவரிசையான கைராளியின் படத் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்.

டான் சாஜி கைலாசின் தி டைகர் (2005) படத்தின் மூலம் மூத்த படத்தொகுப்பாளராக அறிமுகமாகும் முன் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களின் முன்னோட்டங்களின் படத்தொகுப்பை செய்தார். டான் படப்பிடிப்புத் தளத்தில் படத் தொகுப்பு செய்யும் பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டார். அவ்வாறு செய்த முதல் மலையாள படத்தொகுப்பாளர் இவராவார். அதே நேரத்தில் மலையாளத்தின் முதல் எண்ணியல் திரைப்படமான வி. கே. பிரகாசு இயக்கிய மூனமத்தோரல் (2006) படத்திற்கும் படத்தொகுப்பு செய்தார். [2]

இவர் தமிழ் திரைப்படங்களிலும் பணியாற்றினார். ஆதவன் (2009), சுறா (2010), பொன்னர் சங்கர் (2011) போன்ற பெரும் செலவில் தயாரான படங்களில் பணியாற்றினார். ஜில்லா (2014) படத்தில் பணிபுரிந்ததற்காக டான் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றார், இந்தியா கிளிட்ஸ்.காமின் ஒரு விமர்சகர் "டான் மேக்ஸ் நிச்சயமாக ஒரு திறமையான படத்தொகுப்பாளர்" மற்றும் "மிகவும் சிறப்பான சகலவை செய்பவர்" என்று குறிப்பிட்டு, காட்சிகளை இணைக்க அவர் பயன்படுத்திய முறைகள் மூலம் தெளிவாகக் அது காட்டப்பட்டுள்ளது " என்றார். [3] 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், நடிகர் அனூப் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க [4] தனது முதல் படத்தை இயக்கத் தொடங்கினார், மேலும் தனது முதல் திரைப்படமான 10 கல்பனகள் படத்தை 25 நவம்பர் 2016 இல் வெளியிட்டார்.

திரைப்படவியல்

ஆண்டு படம் மொழி குறிப்புகள்
2005 தி டைகர் மலையாளம்
2006 பாபா கல்யாணி மலையாளம்
2007 டைம் மலையாளம்
2007 சோட்டா மும்பை மலையாளம்
2007 அலி பாய் மலையாளம்
2007 மூனாமதோரல் மலையாளம்
2007 ஹலோ மலையாளம்
2007 பரதேசி மலையாளம்
2008 ரௌத்திரம் மலையாளம்
2008 அண்ணன் தம்பி மலையாளம்
2008 குருவி தமிழ்
2008 தலப்பாவு மலையாளம்
2008 எல்லாம் அவன் செயல் தமிழ்
2008 சிலம்பாட்டம் தமிழ்
2009 பிளாக் டாலியா மலையாளம்
2009 ஆதவன் தமிழ்
2010 துரானா 2010 மலையாளம்
2010 ஜக்குபாய் தமிழ்
2010 சுறா தமிழ்
2010 இனிது இனிது தமிழ்
2010 3 சார் சா பீஸ் மலையாளம்
2010 கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மலையாளம்
2010 பெஸ்ட் ஆக்டர் மலையாளம்
2010 காந்தகார் மலையாளம்
2011 சின்ன டவுன் மலையாளம்
2011 சங்கரன்கோவில் தமிழ்
2011 மனுஷ்யம்ருகம் மலையாளம்
2011 பொன்னர் சங்கர் தமிழ்
2011 சப்பா குரிஷு மலையாளம்
2011 உப்புக்கண்டம் பிரதர்ஸ் பேக் இன் ஆக்சன் மலையாளம்
2011 புலிவேசம் தமிழ்
2011 மம்பட்டியான் தமிழ்
2012 சிம்மாசனம் மலையாளம்
2012 சாருலதா தமிழ்/கன்னடம்
2012 மதரசி மலையாளம்
2012 ர்மயோதா மலையாளம்
2013 என்டே மலையாளம்
2013 என்ரி மலையாளம்
2013 ஏபிசிடி: அமெரிக்கன்-பார்ன் கன்பியூஸ் தேசி மலையாளம்
2013 10:30 ஏஎம் லோக்கல் கால் மலையாளம்
2013 பங்கிலீஸ் மலையாளம்
2014 ஜில்லா தமிழ்
2014 நா பங்காரு தள்ளி தெலுங்கு/மலையாளம்
2014 100 டிகிரி செல்சியஸ் மலையாளம்
2016 மான்சூன் மங்கூஸ் மலையாளம்
2016 சாகசம் தமிழ்
2016 10 கல்பனைகள் மலையாளம் இயக்குநராக அறிமுகம்

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்