டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி, (Dr. Radhakrishnan Nagar State Assembly Constituency, சுருக்கமாக ஆர். கே. நகர்) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 11. இது வட சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. இராயபுரம், துறைமுகம், பூங்கா நகர், பெரம்பூர், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சென்னை மாநகராட்சி வார்டு எண் 3 முதல் 8 வரை, 10, 11 மற்றும் 14[2]
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
---|
1977 |
ஐசரி வேலன் |
அதிமுக |
28,416 |
35 |
ஆர்.டி. சீதாபதி |
திமுக |
26,928 |
38.33
|
1980 |
வி. ராஜசேகரன் |
காங்கிரசு |
44,076 |
48 |
ஐசரி வேலன் |
அதிமுக |
36,888 |
40
|
1984 |
எஸ். வேணுகோபால் |
காங்கிரஸ் |
54,334 |
50 |
எஸ். பி. சற்குண பாண்டியன் |
திமுக |
50,483 |
46
|
1989 |
எஸ். பி. சற்குண பாண்டியன் |
திமுக |
54,216 |
45 |
இ. மதுசூதனன் |
அதிமுக(ஜெ) |
29,960 |
25
|
1991 |
இ. மதுசூதனன் |
அதிமுக |
66,710 |
59 |
ராஜசேகரன் |
ஜனதாதளம் |
41,758 |
37
|
1996 |
எஸ். பி. சற்குண பாண்டியன் |
திமுக |
75,125 |
60 |
ரவீந்திரன் |
அதிமுக |
32,044 |
26
|
2001 |
பி. கே. சேகர் பாபு |
அதிமுக |
74,888 |
58 |
எஸ். பி. சற்குண பாண்டியன் |
திமுக |
47,556 |
37
|
2006 |
பி. கே. சேகர் பாபு |
அதிமுக |
84,462 |
50 |
மனோகர் |
காங்கிரஸ் |
66,399 |
40
|
2011 |
பி. வெற்றிவேல் |
அதிமுக |
83,777 |
59.02 |
பி. கே. சேகர் பாபு |
திமுக |
52,522 |
37
|
இடைத்தேர்தல் 2015 |
ஜெ. ஜெயலலிதா |
அதிமுக |
160432 |
- |
சி. மகேந்திரன் |
இந்தியக் கம்யூனிஸ்ட் |
9710 |
|
2016 |
ஜெ. ஜெயலலிதா |
அதிமுக |
97,218 |
56.81 |
சிம்லா முத்துச்சோழன் |
திமுக
|
57,673 |
33.70
|
இடைத்தேர்தல் 2017 |
டி. டி. வி. தினகரன் |
சுயேட்சை |
89,013 |
- |
மதுசூதனன் |
அதிமுக |
48,306 |
-
|
2021[3] |
ஜே. ஜே. எபினேசர் |
திமுக |
95,763 |
51.20 |
ஆர்.எஸ். ராஜேஷ் |
அதிமுக |
53,284 |
28.49
|
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம்
|
2016 வாக்குப்பதிவு சதவீதம்
|
வித்தியாசம்
|
---|
72.4%
|
68.38% [4] |
↓ 4.02%
|
தேர்தல் ஆண்டு
|
நோட்டா வாக்களித்தவர்கள்
|
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
|
---|
2016
|
|
%
|
2016 சட்டமன்றத் தேர்தல் - வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[5],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
---|
1,24,506
|
1,29,889
|
103
|
2,54,498
|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மொத்தம்[4] |
---|
வேட்புமனு தாக்கல் செய்தோர்
|
42
|
10
|
2
|
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
|
36
|
8
|
1
|
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
|
0
|
0
|
0
|
களத்தில் இருந்த வேட்பாளர்கள்
|
36
|
8
|
1
|
முக்கிய வேட்பாளர்கள்வாக்குப்பதிவு
வாக்களித்த ஆண்கள் |
வாக்களித்த பெண்கள் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் |
மொத்தம் |
வாக்களித்த ஆண்கள் சதவீதம் |
வாக்களித்த பெண்கள் சதவீதம் |
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் |
மொத்த சதவீதம்
|
|
|
|
|
% |
% |
% |
%
|
முடிவுகள்முந்தைய தேர்தல்கள்
- 1977 ஆம் ஆண்டில் இச்சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் அதிமுக ஏழு முறையும், திமுக இரண்டு தடவைகளும், இந்தியக் காங்கிரசு கட்சி இரண்டு தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன.
- 2011 தேர்தலில் திருவரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2014ல் சொத்துக்குவிப்பு வழக்கால் பதவியிழந்தார். அந்த வழக்கிலிருந்து உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதும், ஆர். கே. நகரில் போட்டியிட்டு 88 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். பின்னர் 2016 இல் நடந்த தேர்தலில் 56 வீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.[6]
- 2016 திசம்பரில் செயலலிதா இறந்ததை அடுத்து, இத்தொகுதியில் 2017 ஏப்ரல் 12 இல் இடைத் தேர்தல் நடக்கவிருந்த்து.[7] அதிமுக (அம்மா) அணி சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணியின் சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருது கணேசும் போட்டியிட்டனர். இந்நிலையில் வாக்கு அளிக்க பணவிநியோகம் நடந்தது என்று வாக்குப் பதிவுக்கு இரண்டு நாளுக்குமுன் தேர்தலை தேர்தல் ஆணையும் நிறுத்தியது. இதன் பிறகு இடைத்தேர்தல் 2017 டிசம்பர் 21-ம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரது வாக்கு சதவிகிதம் 50.32%. அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றார். இவரது வாக்கு சதவீதம் 27.31%. திமுக பெற்ற வாக்கு 24,581 அதன் சதவீதம் 13.94% ஆகும்.[8]
இடைத் தேர்தல், 2017மேற்கோள்கள்வெளியிணைப்புகள்