ஞான சாரம்

ஞான சாரம் [1] என்னும் பெயரில் பல நூல்கள் உள்ளன. வேதாந்தம், வைணவம், வீரசைவம் சமயம் சார்ந்த நூல்கள் அவை.

  • கண்ணுடைய வள்ளல் [2] இயற்றிய ஞானசாரம்
  • அவரது மாணாக்கர் திருநெறி விளக்கமுடையார் இயற்றிய ஞானசாரம்

இவை இரண்டும் வேதாந்த நூல்கள்

இவை 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆசிரியரும் மாணாக்கரும் செய்தவை. ஆசிரியர் கண்ணுடைய வள்ளல்.. இவரோடு கருத்து மாறுபாடு கொண்டு இவரிடமிருந்து விலகி நூல் செய்தவர் இவரது மாணாக்கர் ‘திருநெறி விளக்குடையார்’ என்பவர்.

கண்ணுடைய வள்ளல்]] இயற்றிய ஞானசாரம்

இந்த நூல். 118 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைக் கொண்டது. இந்த நூல் சிவப்பிரகாசர் இயற்றிய நூலின் அமைப்பினை ஒத்துள்ளது. நூலின் பெரும்பகுதி மாணக்கன் வினாவுதலுக்கு ஆசிரியர் விடை கூறுவது போல அமைந்துள்ளது.

பாடல் எடுத்துக்காட்டு [3]

மிக்க வேதாந்த சைவ மெய்ப்பொருள் பயனாய் மூவர்
தொக்க செந்தமிழ் சேர் வாய்மைச் சுருக்கமாய் வாதவூர-
ருக்கு [4] நின்றோதும் உண்மைக்கு உரியதாய்இந்த நூற்குத்
தக்கது ஓர் உரைக்கின் ஞான சாரமாம் பெயரது ஆமே.

பொய்கைச் சாருவாகன் புகழ் சிவாத்துவிதி சிவ அத்துவிதி ஈறாய்
உய்பொருள் இது என்று எண்ணி இன்றளவு உணர ஒண்ணா
மெய் தரு பொருளாய் இன்ப வீட்டில் வேதாந்தமான
சைவ அத்துவிதம் தன்னைத் தமிழினால் சாற்றலுற்றாம்

திருநெறி விளக்கமுடையார் இயற்றிய ஞானசாரம்

கண்ணுடைய வள்ளல் தன்னைத் ‘திருநெறிக் காவலன்’ என் கூறிக்கொண்டார். இதனை ஏற்றுக்கொள்ள மனமில்லாத இவரது மாணவர் ஆசிரியர் இயற்றிய ‘ஞானசாரம்’ என்னும் நூலைக் குறை சொல்ல முடியாமல் ‘திருநெறி விளக்கம்’ என்னும் பெயரில் ஞானசார நூல் இயற்றியுள்ளார்.

கருவிநூல்

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. வீட்டுக்குச் சுவர் எழுப்புவோர் 'சாரம்' என்னும் படிநிலையைத் தற்காலிகமாக அமைத்துக்கொள்வர். அது போல ஞான வீட்டுச் சுவர் கட்ட அமைத்துக்கொண்ட சாரப் படிநிலை இந்த நூல்.
  2. சரணாலயர் என்னும் பெயரும் இவருக்கு உண்டு
  3. பொருள்நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது.
  4. 'வாதவூரருக்கு' என்னும் ஒரு சொல் இரண்டு அடிகளில் வகையுளிப் பிரிப்புச் செய்யப்பட்டுள்ளது
"https://tamilar.wiki/index.php?title=ஞான_சாரம்&oldid=17298" இருந்து மீள்விக்கப்பட்டது