ஜோசப் பிராட்ஸ்கி

இயாசிஃப் அலெக்ஸாண்ட்ரோவிக் ப்ராட்ஸ்கி (Iosif Aleksandrovich Brodsky [1] 24 மே 1940 - 28 ஜனவரி 1996) ஒரு ரஷ்ய-அமெரிக்க கவிஞரும், கட்டுரையாளரும் ஆவார்.

1972 இல் சோவியத் யூனியனில் இருந்து வெளியேற்றப்பட்டார் ("வெளியேற " கடுமையாக அறிவுறுத்தப்பட்டார்).டபிள்யூ. எச். ஆதன் மற்றும் பிற ஆதரவாளர்களின் உதவியுடன் அமெரிக்காவில் குடியேறினார். அதன்பிறகு மவுண்ட் ஹோலியோக் கல்லூரியிலும், யேல், கொலம்பியா, கேம்பிரிட்ஜ் மற்றும் மிச்சிகன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டார்.

ஆரம்ப ஆண்டுகளில்

பிரொட்ஸ்கி சென் பீட்டர்ஸ்பேர்க்கில் ஒரு உருசிய யூத குடும்பத்தில் பிறந்தார். அவர் பண்டைய ரபினிக் குடும்பமான ஷோரின் (ஷோர்) வம்சாவளியாக இருந்தார். [2] [3] அவரது தந்தை, அலெக்ஸாண்டர் ப்ராட்ஸ்கி, சோவியத் கடற்படையில் ஒரு தொழில்முறை புகைப்படக் கலைஞராக இருந்தார், மேலும் அவரது தாயார் மரியா வோல்பர்ட் ப்ராட்ஸ்காயா ஒரு தொழில்முறை மொழிபெயர்ப்பாளராக இருந்தார். சிறுவயதிலேயே ப்ராட்ஸ்கி லெனின்கிராட் முற்றுகையிலிருந்து தப்பினார்.இவரது ஒரு அத்தை பசியால் இறந்தார். ப்ராட்ஸ்கி தனது ஆசிரியர்களில் பலர் யூத எதிர்ப்புக் கொள்கை கொண்டிருந்தவர்கள் என்றும், சிறு வயதிலிருந்தே தான் அதிருப்தியாளராக உணர்ந்ததாகவும் கூறினார். மேலும் அவர்"நான் லெனினை வெறுக்கத் தொடங்கினேன், நான் கற்றலில் சிறப்பாக இருந்தபோதும், அவருடைய அரசியல் தத்துவம் அல்லது நடைமுறையின் காரணமாக அல்லாமல் ... எங்கும் நிறைந்த அவரது உருவங்கள் காரணமாக நான் அவரை வெறுத்தேன் எனக் கூறினார்."

வியன்னாவில் சிறிது காலம் தங்கியபின், ப்ராட்ஸ்கி ஏன் ஆர்பரில், கவிஞர்களான ஆடென் மற்றும் ப்ராஃபர் ஆகியோரின் உதவியுடன் குடியேறினார். மேலும், ஒரு வருடம் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கவிஞராக ஆனார். [4] ப்ராட்ஸ்கி குயின்ஸ் கல்லூரி (1973–74), ஸ்மித் கல்லூரி, கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராகப் பனிபுரிந்தார். பின்னர் மிச்சிகன் பல்கலைக்கழகத்திற்கு 1974 ஆம் ஆண்டில் சென்றார். அங்கு இவர் 1984 ஆம் ஆண்டு வரை பயின்றார். அவர் ஆண்ட்ரூ மெல்லன் கல்வி நிறுவனத்தில் இலக்கிய பேராசிரியராகவும், மவுண்ட் ஹோலியோக் கல்லூரியில் இலக்கிய பேராசிரியராகவும் இருந்தார்.அங்கு கவிஞரும் வரலாற்றாசிரியருமான பீட்டர் வைரெக்கினை கல்லூரிக்கு கூட்டி வந்தார். [5] 1978 ஆம் ஆண்டில், யேல் பல்கலைக்கழகத்தில் ப்ரொட்ஸ்கிக்கு டாக்டர் ஆஃப் லெட்டர்ஸ் கவுரவ பட்டம் வழங்கப்பட்டது. மேலும் 23 மே 1979 இல், அவர் அமெரிக்க அகாதமி மற்றும் கலை மற்றும் கடிதங்கள் நிறுவனத்தின் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். அவர் 1980 இல் நியூயார்க்கின் கிரீன்விச் கிராமத்திற்கு குடிபெயர்ந்தார், 1981 இல் ஜான் டி மற்றும் கேத்தரின் டி. மேக்ஆர்தர் அறக்கட்டளையின் "ஜீனியஸ்" விருதைப் பெற்றார். [6] 1986 ஆம் ஆண்டில், லெஸ் தான் ஒன் என்ற கட்டுரைகளின் தொகுப்பு விமர்சனத்திற்கான சிறந்த தேசிய புத்தக விமர்சகருக்கான விருதை வென்றது, மேலும் அவருக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் கவுரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

விருது

பிரொட்ஸ்கிக்கு 1987 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது, தெளிவான சிந்தனைக்காகவும், கவிதையின் ஆழத்திற்காகவும் இவருக்கு இந்த விருது வழக்கபட்டது.

சான்றுகள்

  1. Also known as Josip, Josef or Joseph.
  2. Surnames of Rabbinical Families. JewishGen
  3. Finding Our Fathers: A Guidebook to Jewish Genealogy By Dan Rottenberg
  4. Haven (2006) p84
  5. Profile[தொடர்பிழந்த இணைப்பு] at Mount Holyoke College
  6. Cole, Henri "Brodsky, Joseph". The Oxford Companion to Twentieth-Century Poetry in English. Ian Hamilton. Oxford University Press, 1996.
"https://tamilar.wiki/index.php?title=ஜோசப்_பிராட்ஸ்கி&oldid=19690" இருந்து மீள்விக்கப்பட்டது