ஜுபு ஜேக்கப்

ஜிபு ஜேக்கப் (Jibu Jacob) மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றும் ஒரு இந்திய ஒளிப்பதிவாளரும் , இயக்குநரும் ஆவார். அவர் 2002 ஆம் ஆண்டில் ஸ்டாப் வயலன்ஸ் என்ற குற்றப் பின்னணி படத்துடன் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். ஒரு ஒளிப்பதிவாளராக ஒரு தசாப்த கால வாழ்க்கைக்குப் பிறகு, இவர் 2014இல் அரசியல் நையாண்டி திரைப்படமான வெள்ளிமூங்கா மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவரது சமீபத்திய இயக்குமான முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல் சனவரி 2017இல் வெளியிடப்பட்டது.

ஜிபு ஜேக்கப்
பிறப்புசரக்கள், எர்ணாகுளம், கேரளா
தேசியம் இந்தியா
பணிஒளிப்பதிவாளர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2002 - தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்வெள்ளிமூங்கா (2014)
முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல்

திரைப்பட வாழ்க்கை

ஒரு உதவி ஒளிப்பதிவாளராக சிறுது காலம் பணியாற்றிய பின்னர் மலையாளத் திரையுலகில் இவர் ஏ. கே. சாஜன்‎ இயக்கத்தில் 2002இல் வெளியான ஸ்டாப் வயலன்ஸ் என்ற துப்பறியும் படத்தில் சுயாதீனமாக ஒளிப்பதிவு செய்து அறிமுகமானார் பின்னர் 2013 வரை பல மலையாளப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். பிஜு மேனன் நடித்த நகைச்சுவையான அரசியல் நையாண்டி திரைப்படமான வெள்ளிமூங்கா (2014) மூலம் இவர் இயக்குனராக அறிமுகமானார். இது விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. [1] மோகன்லால் நடித்த முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல் இவரது இரண்டாவது இயக்கமாக இருந்தது. இது சனவரி 2017 இல் வெளியான ஒரு நகைச்சுவை குடும்பத் திரைப்படம். இது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த மலையாளப் படங்களில் ஒன்றாக மாறியது. [2] [3] [4] இவர் 2015இல் வெளியான பென் என்ற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜுபு_ஜேக்கப்&oldid=21376" இருந்து மீள்விக்கப்பட்டது