ஜீவன் தொண்டமான்
ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman; பிறப்பு: 9 நவம்பர் 1994) இலங்கையின் மலையக அரசியல்வாதி ஆவார்.[1]
ஜீவன் தொண்டமான் நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராசாங்க அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 12 ஆகத்து 2020 | |
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு ஆகத்து 2020 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஜீவன் தொண்டமான் 9 நவம்பர் 1994 |
குடியுரிமை | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் |
பிற அரசியல் சார்புகள் |
இலங்கை பொதுசன முன்னணி |
படித்த கல்வி நிறுவனங்கள் | நோர்த்தம்பிரியா பல்கலைக்கழகம், இங்கிலாந்து |
வாழ்க்கைக் குறிப்பு
ஜீவன் தொண்டமான் 1994 நவம்பர் 9 இல் பிறந்தார்.[2] இவர் முன்னாள் அமைச்சரும், தொழிற்சங்கத் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானின் மகனும், சௌமியமூர்த்தி தொண்டமானின் பூட்டனும் ஆவார்.[3] இவர் கொழும்பு, கேட்வே ஆரம்பப் பாடசாலை, சென்னை, ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் சின்மயா பன்னாட்டுப் பாடசாலையிலும் கல்வி கற்று,[2] இங்கிலாந்து நோர்தம்பிரியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 2017 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2][4] இலண்டனில் சிறிது காலம் சட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய பின்னர்,[2] தந்தையின் அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகளில் இணைந்து சேவையாற்ற விரும்பி இலங்கை திரும்பினார்.[2]
அரசியலில்
2020 சூன் மாதத்தில் தந்தை ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவிற்குப் பின்னர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாலராக நியமிக்கப்பட்டார்.[5][6] 2020 நாடாளுமன்றத் தேர்தலில், இலங்கை பொதுசன முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு, மாவட்டத்திலேயே அதிகூடிய விருப்பு வாக்குகள் (109,155) பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[7][8][9]
ஜீவன் தொண்டமான் 2020 ஆகத்து 12 இல் கோட்டாபய ராஜபக்சவின் இரண்டாவது அமைச்சரவையில் தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராசாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[10]
தேர்தல் வரலாறு
தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு |
---|---|---|---|---|
2020 நாடாளுமன்றம் | நுவரெலியா மாவட்டம் | இலங்கை பொதுசன முன்னணி | தெரிவு |
மேற்கோள்கள்
- ↑ "Directory of Members: Jeevan Thondaman". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3329. பார்த்த நாள்: 11 August 2020.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 D. B. S. Jeyaraj (18 July 2020). "CWC, Jeevan Thondaman and Nuwara- Eliya Tamils". The Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/CWC-Jeevan-Thondaman-and-Nuwara-Eliya-Tamils/172-192186. பார்த்த நாள்: 9 August 2020.
- ↑ Padmasiri, Ranjith (9 August 2020). "Politics runs in their blood". Sunday Times (Colombo, Sri Lanka). http://www.sundaytimes.lk/200809/news/politics-runs-in-their-blood-411764.html. பார்த்த நாள்: 9 August 2020.
- ↑ Ramiah Mohan, Sulochana (6 June 2020). "My father was not a saviour, but a strong leader - Jeevan Thondaman". Ceylon Today (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 15 ஜூலை 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200715163110/https://ceylontoday.lk/news/my-father-was-not-a-saviour-but-a-strong-leader-jeevan-thondaman. பார்த்த நாள்: 9 August 2020.
- ↑ "Jeevan Thondaman appointed as CWC’s General Secretary". Daily News (Colombo, Sri Lanka). 17 June 2020. http://www.dailynews.lk/2020/06/17/political/220932/jeevan-thondaman-appointed-cwc%E2%80%99s-general-secretary. பார்த்த நாள்: 9 August 2020.
- ↑ Rajapaksa, Ranjith (17 June 2020). "Jeevan Thondaman appointed as General Secretary of CWC". The Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/breaking_news/Jeevan-Thondaman-appointed-as-General-Secretary-of-CWC/108-190182. பார்த்த நாள்: 9 August 2020.
- ↑
- ↑ Srinivasan, Meera (8 August 2020). "An alliance of Malayaha Tamil MPs that stood out". தி இந்து (Chennai, India). https://www.thehindu.com/news/international/an-alliance-of-malayaha-tamil-mps-that-stood-out/article32306174.ece. பார்த்த நாள்: 9 August 2020.
- ↑ Mallawaarachchi, Amali (8 August 2020). "Over 60 new MPs elected to House". Daily News (Colombo, Sri Lanka). https://www.dailynews.lk/2020/08/08/political/225355/over-60-new-mps-elected-house. பார்த்த நாள்: 9 August 2020.
- ↑ "Jeevan Thondaman gets State Minister post". கொழும்பு கசெட். 12 August 2020. https://colombogazette.com/2020/08/12/jeevan-thondaman-gets-state-minister-post/. பார்த்த நாள்: 13 August 2020.