ஜில்.ஜங்.ஜக்

ஜில் ஜங் ஜக் (Jil Jung Juk) என்பது 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை தீராஜ் வைடி (Deeraj Vaidy) இயக்கினார். சித்தார்த், சனத் ரெட்டி, அவினாஷ் ரகுதேவன் ஆகியோர் இத்திரைப்படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். சித்தார்த்தின் 25 ஆவது திரைப்படம் இதுவேயாகும். இத்திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஆவார்.

ஜில் ஜங் ஜக்
இயக்கம்தீராஜ் வைடி
தயாரிப்புசித்தார்த்
கதைதீராஜ் வைடி
மோகன் ராமகிருஷ்ணன்
இசைவிஷால் சந்திரசேகர்
நடிப்புசித்தார்த்
சனத் ரெட்டி
அவினாஷ் ரகுதேவன்
ஒளிப்பதிவுஸ்ரேயாஸ் கிருஷ்ணா
படத்தொகுப்புகூட்ஸ் ஸ்கெனிடர்
கலையகம்எடகி என்டர்டெயின்மென்ட்
வெளியீடு12 பெப்ரவரி 2016
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தயாரிப்பு

2015 ஆம் ஆண்டில் நடிகர் சித்தார்த், எனக்குள் ஒருவன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் நிறைவடைந்த பின்னர், தனது சொந்தத் தயாரிப்பில் திரைப்படமொன்றைத் தயாரிக்க எண்ணினார். அதன்படி அத்திரைப்படத்திற்கு இயக்குநராக புதுமுக இயக்குநர் தீராஜ் வைடியை நியமிக்க முடிவுசெய்து, தன்னுடைய திரைப்படத்திற்கு நகைச்சுவைத் தலைப்பாக "ஜில் ஜங் ஜக்" எனும் தலைப்பிடலாம் எனவும் தீர்மானித்தார். 2015 ஆம் ஆண்டின் மே மாதத்தில் திரைப்படம் தயாரிப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.[1] 1994 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட காதலன் எனும் திரைப்படத்தில் நடிகர் வடிவேலு பேசும் ஜில் ஜங் ஜக் ஓர் சிறு வசனத்தில் இருந்தே தலைப்பு தெரிவு செய்யப்பட்டது. ஜில் ஜங் ஜக் எனும் இத்தலைப்பு மூன்று நபர்களையும் விபரிப்பதாக அமைந்துள்ளது.[2]

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களால் இத்திரைப்படத்தின் உத்தியோகபூர்வ முதற் சுவரொட்டி வெளியிடப்பட்டது.[3] இத்திரைப்படத்தில் "சூட் த குருவி" பாடல் வெளியாகிய சில தினங்களிலேயே பிரபல்யம் அடைந்தது.[4][5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜில்.ஜங்.ஜக்&oldid=37996" இருந்து மீள்விக்கப்பட்டது