ஜனனி ஜனநாயகம்

ஜனனி (ஜான்) ஜனநாயகம் என்பவர் பிரித்தானியத் தமிழரும், வங்கித் தொழில் நெறிஞரும், மனித உரிமைச் செயற்பாட்டாளரும், அரசியல்வாதியும் ஆவர். இவர் 2009 இல் இடம்பெற்ற ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் லண்டன் பகுதியில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிட்டார்[3]. இவர் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஆதரவில் போட்டியிட்டார். 2009, ஜூன் 8 இல் நடந்த தேர்தலில் இவர் 50,000 வாக்குகளைப் பெற்றிருந்தும், வெற்றி பெறத் தவறினார்[4].

ஜனனி ஜனநாயகம்
Janani Jananayagam
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புயாழ்ப்பாணம், இலங்கை[1]
தேசியம்பிரித்தானியர்
அரசியல் கட்சிசுயேச்சை
வாழிடம்லண்டன்[2]
முன்னாள் கல்லூரிமான்செஸ்டர் பல்கலைக்கழகம்
இம்பீரியல் கல்லூரி
இலண்டன்

INSEAD
வேலைதிட்ட முகாமையாளர்
இணையத்தளம்http://vote4jan.org/beta/

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜனனி, தனது பெரும்பாலான இளமைக் காலத்தை நைஜீரியாவிலும், சாம்பியாவிலும் கழித்தார். இவரின் பெற்றோர் அங்கு ஆசிரியத் தொழிலாற்றி வந்தனர்[1]. பின்னர் பெற்றோருடன் ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார்[5]. மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கணினியியலில் சிறப்புப் பட்டத்தைப் பெற்றார். பின்னர் லண்டன் இம்பீரியல் கல்லூரியில் பிரயோக கணிதத்தில் முதுமாணிப் பட்டத்தையும், இன்சீட் வர்த்தகக் கல்லூரியில் வர்த்தக முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார்.

தொழில் நெறிஞராக

கணினித் துறையில் சிலகாலம் ஆய்வு மற்றும் வளர்ச்சியில் ஈடுபட்டிருந்த ஜனனி, பின்னர் வங்கி முகாமைத்துவத்தில் நாட்டம் கொண்டார். தற்போது இவர் முன்னணி இத்தாலிய வங்கியொன்றின் திட்ட முகாமையாளராக லண்டனிலும், ஜெர்மனியிலும் பணிபுரிகிறார்.

சமூக சேவகராக

1995ஆம் ஆண்டில் HURT என்ற பெயரில் மனித உரிமை இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார். அத்துடன் இனவழிப்புக்கு எதிரான தமிழர் என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினராகவும் செயற்படுகிறார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற வேட்பாளர்

2009இல் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல்களில் ஜனனி லண்டன் நகர சுயேச்சை வேட்பாளராக நின்றார். பின்வரும் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இவர் தேர்தல் களத்தில் இறங்கினார்[6]:

  • மனித உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திரம்
  • Financial transparency and effective regulation
  • Equality and diversity
  • Small Businesses and entrepreneurship
  • Ethical foreign policy
  • Animal welfare

இவருக்கு பெரும்பாலான புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். பிரபல பாடகி மாதங்கி அருள்பிரகாசம் (எம்.ஐ.ஏ.) ஆதரவு தெரிவித்திருந்தார்[1]. அத்துடன் ஜனனிக்கு ஆதரவாக அவர் ஒரு ஒன்லைன் பிரச்சாரத்தையும் தொடங்கி பாடல் ஒன்றையும் பாடியிருந்தார்[1].

போட்டியிட்ட 19 கட்சிகள் மற்றும் சுயேச்சை உறுப்பினர்களில், ஜனனி 50,014 வாக்குகள் (2..86%) பெற்று 8வதாக வந்தார்[7]. ஆனாலும் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு இவர் தெரிவாகவில்லை. ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றிலேயே, ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு இவ்வளவு வாக்குகள் இதுவரை கிடைத்ததில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அனைத்து சுயேச்சை வேட்பாளர்களும் மொத்தமாக பெற்ற வாக்குகளை விட 2 மடங்கு அதிக வாக்குகளையும் ஜனனி பெற்றுள்ளார்.

லண்டன் பகுதியில் எட்டு எம்.பி. இடங்கள் உள்ளன. இதில், 3 இடங்களை கன்சர்வேட்டிவ் கட்சியும், ஆளும் தொழிற் கட்சி 2 இடங்களையும் பெற்றன. லிபரல் மக்களாட்சிக் கட்சி, பசுமைக் கட்சி, இங்கிலாந்து சுயேச்சைக் கட்சி ஆகியோருக்குத் தலா ஓர் இடம் கிடைத்தது[8].

ஒவ்வொரு லண்டன் லண்டன் தன்னாட்சி நகரங்களில் (London borough) ஜனனி பெற்ற வாக்குகள்:

நகரம் வாக்குகள் % நிலை நகரம் வாக்குகள் % நிலை நகரம் வாக்குகள் % நிலை
பார்க்கிங், டாகென்ஹாம்[9] 386 1.08% 10வது ஹாமர்சிமித் & ஃபூலம்[10] 140 0.35% 13வது லூவிஷாம்[11] 1,992 3.76% 8வது
பார்னெட்[12] 1,234 1.51% 8வது ஹாரிங்கி நியூஹம்[13] 3,520 7.40% 3வது
பெக்சிலி[14] 378 0.62% 11வது ஹரோ[15] 6,856 11.00% 3வது ரெட்பிரிட்ஜ்[16] 4,910 7.81% 6வது
பிரெண்ட்[17] 4,867 8.33% 5வது ஹாவரிங்[18] 203 0.33% 13வது தேம்ஸ் மீதான ரிச்மண்ட்[19] 147 0.28% 13வது
புரொம்லி[20] 619 0.71% 9வது ஹிலிங்டன் சவுத்வார்க்[21] 163 0.30% 13வது
காம்டன்[22] 121 0.26% 15வது ஹவுன்சுலோ[23] 1,054 2.09% 8வது சட்டன்[24] 1,664 3.40% 7வது
குரோய்டன்[25] 3,128 3.87% 8வது இஸ்லிங்டன்[26] 128 0.30% 15வது டவர் ஹாம்லெட்ஸ்[27] 109 0.24% 16வது
ஈலிங்[28] 4,716 6.51% 6வது கென்சிங்டன், செல்சி[29] 70 0.26% 15வது வால்த்தம் ஃபொரெஸ்ட்[30] 1,493 2.86% 8வது
என்ஃபீல்ட்[31] 1,194 1.83% 8வது தேம்ஸ் மீதான கிங்ஸ்டன்[32] 2,150 5.16% 6வது வான்ட்ஸ்வர்த்[33] 928 1.35% 8வது
கிரீனிச்[34] 773 1.53% 9வது லாம்பெத்[35] 176 0.31% 14வது வெஸ்ட்மின்ஸ்டர்[36] 100 0.27% 16வது
ஹாக்னி மேர்ட்டன்[37] 3,960 7.95% 6வது லண்டன் நகரம்[38] 4 0.19% =14வது

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "MIA's endorsement expected to boost Jananayagam's MEP prospects". தமிழ்நெட். 3 June 2009. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29514. பார்த்த நாள்: 4 ஜூன் 2009. 
  2. "Official list and contact details". ஐரோப்பிய நாடாளுமன்ற ஐக்கிய இராச்சிய அலுவலகம். http://www.europarl.org.uk/sites/all/modules/tinymce/tinymce/jscripts/tiny_mce/plugins/filemanager/files/elections/candidates/pdf/official/London.pdf. பார்த்த நாள்: 4 ஜூன் 2009. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Candidates". ஐரோப்பிய நாடாளுமன்ற ஐக்கிய இராச்சிய அலுவலகம் இம் மூலத்தில் இருந்து 2009-05-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090510125544/http://www.europarl.org.uk/section/european-elections/candidates#london. பார்த்த நாள்: 4 சூன் 2009. 
  4. Stop-Genocide’ candidate secures record result, but misses London seat
  5. "British Tamil contests seat for European Parliament". தமிழ்நெட். 15 மே 2009. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29366. பார்த்த நாள்: 4 June 2009. 
  6. "Policies". Vote4Kan இம் மூலத்தில் இருந்து 2009-06-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090608142502/http://vote4jan.org/beta/?page_id=3. பார்த்த நாள்: 4 சூன் 2009. 
  7. "European Election 2009: London". பிபிசி. 8 June 2009. http://news.bbc.co.uk/1/shared/bsp/hi/elections/euro/09/html/ukregion_39.stm. பார்த்த நாள்: 8 சூன் 2009. 
  8. "European Election 2009: UK Results". பிபிசி. 8 சூன் 2009. http://news.bbc.co.uk/1/shared/bsp/hi/elections/euro/09/html/ukregion_999999.stm. பார்த்த நாள்: 8 சூன் 2009. 
  9. "European Parliamentary Election Results". London Borough of Barking & Dagenham இம் மூலத்தில் இருந்து 11 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100411082757/http://www.barking-dagenham.gov.uk/9-democracy/elections/results/elect-euro-09.html. பார்த்த நாள்: 9 June 2009. 
  10. "Hammersmith & Fulham declaration". London Borough of Hammersmith & Fulham இம் மூலத்தில் இருந்து 17 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090617045542/http://www.lbhf.gov.uk/Images/EuropeanParliamentElectionResultsforHammersmithFulhamLocalCountingArea_tcm21-123339.pdf. பார்த்த நாள்: 9 June 2009. 
  11. "Lewisham Council - Documents - European Parliamentary Election 4 June 2009". London Borough of Lewisham. http://www.lewisham.gov.uk/CouncilAndDemocracy/DemocracyAndElections/EuropeanElections/. பார்த்த நாள்: 12 June 2009. 
  12. "Barnet declaration". London Borough of Barnet இம் மூலத்தில் இருந்து 17 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090617030052/http://www.barnet.gov.uk/european-parliamentary-election-barnet-result.pdf. பார்த்த நாள்: 9 June 2009. 
  13. "European Parliamentary Election results 2009". Newham Council இம் மூலத்தில் இருந்து 12 ஜூன் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090612234422/http://www.newham.gov.uk/Services/votingandelections/EuropeanParliamentaryElectionresults2009.htm. பார்த்த நாள்: 9 June 2009. 
  14. "Bexley declaration". London Borough of Bexley இம் மூலத்தில் இருந்து 17 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090617051039/http://www.bexley.gov.uk/service/elections/european_election_local_counting_area.pdf. பார்த்த நாள்: 9 June 2009. 
  15. "European Parliamentary Election - Thursday 4th June 2009". Harrow Council. http://www.harrow.gov.uk/www2/mgElectionResults.aspx?ID=3&RPID=652560&J=2. பார்த்த நாள்: 9 June 2009. 
  16. "European Election results". Redbridge i. http://www.redbridge.gov.uk/cms/news_and_events/latest_news/European_election_results.aspx. பார்த்த நாள்: 9 June 2009. [தொடர்பிழந்த இணைப்பு]
  17. "Election results for Brent". Brent Council இம் மூலத்தில் இருந்து 12 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090612212819/http://www.brent.gov.uk/home.nsf/news/LBB-863. பார்த்த நாள்: 9 June 2009. 
  18. "Euro Election Results". Havering Council இம் மூலத்தில் இருந்து 8 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110608210756/http://www.havering.gov.uk/index.aspx?articleid=15999. பார்த்த நாள்: 9 June 2009. 
  19. "Richmond upon Thames declaration". London Borough of Richmond upon Thames. http://www.richmond.gov.uk/eu_declaration_20080608.pdf. பார்த்த நாள்: 9 June 2009. 
  20. "European Parliamentary Election 4 June 2009 - result of poll for the local counting area of Bromley". London Borough of Bromley இம் மூலத்தில் இருந்து 15 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100415005529/http://www.bromley.gov.uk/council/elections+and+voting/european_elections_declaration_of_poll+June+2009.htm. பார்த்த நாள்: 9 June 2009. 
  21. "Southwark declaration". London Borough of Southwark. http://www.southwark.gov.uk/Uploads/FILE_42714.pdf. பார்த்த நாள்: 9 June 2009. [தொடர்பிழந்த இணைப்பு]
  22. "European Parliamentary election results". Camden Council இம் மூலத்தில் இருந்து 5 September 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090905070227/http://www.camden.gov.uk/ccm/content/council-and-democracy/news/2009/june/election-results-2009.en. பார்த்த நாள்: 9 June 2009. 
  23. "Hounslow declaration". London Borough of Hounslow இம் மூலத்தில் இருந்து 16 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110716142409/http://www.hounslow.gov.uk/euro_election_results_jun09.pdf. பார்த்த நாள்: 9 June 2009. 
  24. "Election and other news". London Borough of Sutton. http://www.sutton.gov.uk/index.aspx?articleid=1447. பார்த்த நாள்: 9 June 2009. 
  25. "Croydon declaration". Croydon Council இம் மூலத்தில் இருந்து 17 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090617002521/http://www.croydon.gov.uk/contents/departments/democracy/pdf/599154/837248/euroresultscroydon.pdf. பார்த்த நாள்: 9 June 2009. 
  26. "European Parliamentary Election 2009". Islington Council இம் மூலத்தில் இருந்து 3 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090603043119/http://www.islington.gov.uk/Council/political/VotingAndElections/european_parliamentary_elections/default.asp. பார்த்த நாள்: 9 June 2009. 
  27. "Results of the European Parliament Election for Tower Hamlets on June 4 2009". Tower Hamlets Council இம் மூலத்தில் இருந்து 11 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090611080233/http://www.towerhamlets.gov.uk/lgsl/951-1000/999_european_parliamentary_ele/results_of__the_european_parli.aspx. பார்த்த நாள்: 9 June 2009. 
  28. "European Elections 2009". Ealing Council. http://www.ealing.gov.uk/services/council/elections/european_elections09.html. பார்த்த நாள்: 9 June 2009. 
  29. "European Parliamentary Elections on 4 June 2009". Royal Borough of Kensington & Chelsea இம் மூலத்தில் இருந்து 13 ஜூன் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090613005138/http://www.rbkc.gov.uk/YourCouncil/general/euro_elections2009results.asp. பார்த்த நாள்: 9 June 2009. 
  30. "European election results". Waltham Forest Council இம் மூலத்தில் இருந்து 30 May 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090530070543/http://www.walthamforest.gov.uk/index/news/euro-elections.htm. பார்த்த நாள்: 9 June 2009. 
  31. "Enfield declaration". Enfield Council. http://www.enfield.gov.uk/downloads/Enfield%20Europen%20Parliament%20Result.pdf. பார்த்த நாள்: 9 June 2009. [தொடர்பிழந்த இணைப்பு]
  32. "European Parliamentary Election 2009 - Results". Royal Kingston இம் மூலத்தில் இருந்து 12 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090612213007/http://www.kingston.gov.uk/information/your_council/elections/results/euro_2009_results.htm. பார்த்த நாள்: 9 June 2009. 
  33. "Wandsworth declaration". Wandsworth Borough Council. http://www.wandsworth.gov.uk/NR/rdonlyres/exrtux2wihvz2czcgjsis7te4nrtkjod6ntwdrf72yrfzxiwde64ye2ymljwut7darij3bmisqm266uvjvkgzzg6bja/WandsworthResults09.pdf. பார்த்த நாள்: 9 June 2009. [தொடர்பிழந்த இணைப்பு]
  34. "Greenwich declaration". Greenwich Council இம் மூலத்தில் இருந்து 17 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090617162334/http://www.greenwich.gov.uk/NR/rdonlyres/E2A39ECE-3738-4D55-BAC7-F4668BA80C90/0/european_election_results.pdf. பார்த்த நாள்: 9 June 2009. 
  35. "Lambeth declaration". Lambeth Council இம் மூலத்தில் இருந்து 17 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090617003035/http://www.lambeth.gov.uk/NR/rdonlyres/C0ECA56C-4159-466F-B1BB-64B8A97C3962/0/EuroResultLambeth09.pdf. பார்த்த நாள்: 9 June 2009. 
  36. "Westminster declaration". Westminster City Council. http://www3.westminster.gov.uk/docstores/publications_store/WestminsterDeclaration.doc. பார்த்த நாள்: 9 June 2009. 
  37. "Merton declaration". Merton Council இம் மூலத்தில் இருந்து 27 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141027062529/http://www.merton.gov.uk/council/voting/elections/resultlrodeclaration2009v2.pdf. பார்த்த நாள்: 9 June 2009. 
  38. "City of London declaration". Westminster City Council. http://www3.westminster.gov.uk/docstores/publications_store/CityofLondonDeclaration.doc. பார்த்த நாள்: 9 June 2009. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜனனி_ஜனநாயகம்&oldid=23940" இருந்து மீள்விக்கப்பட்டது