சோபனா விக்னேஷ்
முனைவர் சோபனா விக்னேஷ் கருநாடக சங்கீத பாடகர். இவர் பெரும்பாலும் தெய்வீக பாடல்களைப் பாடுபவர். மகாநதி திரைப்படத்தில் நடித்ததால் இவர் 'மகாநதி' சோபனா என்றும் அறிப்படுகிறார்.
இயற்பெயர் | சோபனா |
---|---|
பணி | பாடகர் |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முனைவர் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | கலைமாமணி விருது (2012 குரலிசை) |
இணையதளம் | http://shobanavignesh.com/ |
ஆரம்ப வாழ்க்கை
சோபனா அவர்கள் கும்பகோணத்தில் என். குமார் மற்றும் ரேவதி தம்பதியருக்கு பிறந்தார். பின்னர் சென்னையில் வளர்ந்தார். சங்கீத பாரம்பரியத்தில் இருந்து வரும் சோபனா, தனது ஐந்து வயது முதல் சங்கீதம் கற்க ஆரம்பித்தார்.[1] திருமணம் ஆன பின்பு சில வருடங்கள் அமெரிக்காவில் வசித்து வந்தார்.
திரைப்படத்தில் அறிமுகம்
கமல்ஹாசன் நடித்த மகாநதி திரைப்படத்தில் தனது 12ஆம் வயதில் கமல்ஹாசனின் மகளாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். அப்படத்தில் ஸ்ரீ ரங்க ரங்க நாததின் பாதம் என்னும் பாடலை இளையராஜா அவர்களின் இசையில் பாடினார்.[1] இப்படத்தில் கமலின் மகள் கதாபாத்திரத்திற்கு ஆள் தேடிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு பள்ளிக்கூடத்தில் சோபனாவை பார்த்து தேர்த்தெடுத்ததாக அப்படத்தின் இயக்குநர் சந்தான பாரதி குறிப்பிட்டார்.[2]
படிப்பு
தனது திருமனத்திற்கு பிறகு அவர் அன்னை தெரசா பல்கலைகழக்கதில் இருந்து 2011 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.[1] இசையில் இளங்கலைப் பட்டத்தை சென்னை பல்கலைகழகத்தில் முடித்தார். இதழியலில் முதுகலை பட்டத்தை அழகப்பா பல்கலைக்கழகம் மூலம் பெற்றார். மேலும் மேற்கத்திய மரபரபு சார்ந்த இசையிலும் பயிற்சி பெற்றுள்ளார். பள்ளிப் படிப்பை சென்னை பத்ப ஷேசாதிரி பள்ளிக்கூடத்தில் படித்தார்.
இசைப்பயணம்
சென்னையில் மார்கழி மாதத்தில் நடைபெறும் சங்கீத கச்சேரிகளில் தவறாமல் கலந்து கொண்டு பாடுகிறார்.[1] ஒவ்வொரு ஆண்டும் திருவையாறில் தியாகராஜர் சன்னதில் நடக்கும் இசைக் கச்சேரியில் பங்குகொள்கிறார்.[3] 'சென்னையில் திருவையாறு', 'மார்கழி மகோத்சவம்' போன்ற நிகழ்ச்சிகளிலும் தோன்றி பாடுகிறார். சென்னையில் உள்ள 'ஸ்ரீ கிருஷ்ண கான சபா', 'நாரத கான சபா', 'தியாகராய பிரம்ம கான சபா' முதலிய சபாக்களில் அடிக்கடி பாடுகிறார். தனது 12ஆம் வயதில் முதல் திரைப்பட பாடல் பாடிய பின்னர், அதே வருடத்தில் ஒரு இசைத் தொகுப்பையும் பாடி வெளியிட்டார். பின்னர் பல நூறு பாடல்களைப் பாடி இசைத் தடத்தை வெளியிட்டுள்ளார்.
திரைப்பின்னணிப் பாடல்
பல திரைப்படப் பாடல்களுக்கு பின்னணி பாடியுள்ளார். மகாநதி (தமிழ்), மகாநதி (தெலுங்கு), அரவிந்தன், புண்ணியவதி, கண்ணெதிரே தோன்றினாள், அழகான நாட்கள், கனவே கலையாதே முதலிய படங்களுக்கு பின்னணிப் பாடல் பாடியுள்ளார்.
எழுத்து
சோபனா அவர்கள் பல தொகுப்பு நூல்கள் மற்றும் கல்வி சார்ந்த நாளிதழில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 'கட்டுரைக் கொத்து' என்னும் நூலில் 'இசை எல்லைகளைக் கடந்தது' என்னும் கட்டுரையை எழுதியுள்ளார்.[4] 'நடனம் மற்றும் இசையில் பல பரிமாணங்கள்' என்னும் நூலில் 'நடனம், நாடகம் மற்றும் இசை நாடகத்தின் மீது ஒரு படிப்பு' என்னும் கட்டுரையை எழுதியுள்ளார்.[4] அவரது நேர்காணல்கள் பல நாளிதழ்களில் வெளிவந்துள்ளது.[5]
விருதுகள்
- தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் வரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் 2011 முதல் 2018 வரையிலான காலகட்டத்திற்காக கலைமாமணி விருது அக்டோபர் 14, 2019 ஆம் நாள் சோபனா அவர்களுக்கு வழங்கப்பட்டது.[6] இவ்விருது இவருக்கு 2012 ஆம் ஆண்டுக்கு குரலிசை பிரிவின் கீழ் வழங்கப்பட்டது.[7]
- இசைச் செல்வம் - முத்தமிழ் பேரவை, சென்னை, மே 2015[4]
- தமிழ் இசைப் பேரொலி - நியூயார்க் தமிழ்ச் சங்கம், ஏப்ரல் 2014[4]
- தனிக் கலைஞர் விருது - மாரிலேடன் மாநில கலைக் குழு, ஐக்கிய அமெரிக்கா[4]
சமூக சேவை
இந்தியா, மலேசியா, ஐக்கிய அமெரிக்க முதலிய நாடுகளில் பல அரசு சாரா சமூக நிறவனங்களுடன் பணியாற்றுகிறார். அந்நிறுவனங்களுக்காக நிதி திரட்டும் விதமாக இசைக் கச்சேரிகள் மற்றும் ஆண்டு விழா கச்சேரிகள் செய்து கொடுத்துள்ளார். இந்தியாவில் அரவிந்த் கண் மருத்துவமணை மற்றும் வலிப்பு சம்பந்தமாக பாதிக்கப்பட்ட குழுந்தைகளுக்காக இசை கச்சேரிகள் நடத்தி கொடுத்துள்ளார்.[4]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "என்றும் நான் பாடகிதான் ...மகாநதி ஷோபனா". 2017-01-31. https://www.dinamalar.com/news_detail.asp?id=1695342.
- ↑ ""இந்தக் காட்சி பிடிக்கலைனு அந்தப் பொண்ணு அன்னிக்கு நடிக்கவராமலே போயிடுச்சு !" - 'மகாநதி' சந்தானபாரதி #25YearsOfMahanadi" (in ta). https://cinema.vikatan.com/tamil-cinema/147110-director-santhana-bharathi-says-about-mahanadi-movie.
- ↑ Jan 18, Sampath Kumar; 2017; Ist, 11:45. "Thyagaraja Aradhana: Young singers flock Thyagaraja Aradhana" (in en). https://timesofindia.indiatimes.com/city/trichy/young-singers-flock-thyagaraja-aradhana/articleshow/56633401.cms.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Vishwanath, Narayana (2017-08-19). "Parents, teachers must create learning environment for kids: Shobana" (in en). https://www.deccanchronicle.com/entertainment/music/190817/parents-teachers-must-create-learning-environment-for-kids-shobana.html.
- ↑ "Press" (in en-US). http://shobanavignesh.com/?page_id=2914.
- ↑ "ஜெயலலிதா பெயரில் 3 விருதுகள்" (in ta) இம் மூலத்தில் இருந்து 2019-09-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190913233345/http://maalaisudar.com/?p=62438.
- ↑ "நடிகைகள் பிரியாமணி, நளினி நடிகர்கள் கார்த்தி, விஜய் சேதுபதி உள்பட 201 பேருக்கு கலைமாமணி விருது தமிழக அரசு அறிவித்தது". 2019-02-28. http://www.dailythanthi.com/News/State/2019/02/28211154/Announcement-of-the-Kalaimamani-Awards-names-of-the.vpf.
வெளியிணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம் – http://shobanavignesh.com/
- கீச்சு இணையதளம் - shobanavignesh
- முக நூல் இணையதளம் - MahanadhiShobana
- உன் குழல் இணையதளம் - shobanavignesh