சோடச கலாப் பிரசாத சட்கம்

சோடச கலாப் பிரசாத சட்கம் [1] [2] என்னும் நூல் பிரசாத நூல்களில் ஒன்று. திருமந்திரம் [3] இதனை ‘மேதாதி ஈரெட்டு’ என்று குறிப்பிடுகிறது. [4] 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குருஞான சம்பந்தர் இயற்றிய நூல். சோடசம் என்னும் வடசொல் 16 என்னும் எண்ணைக் குறிக்கும். இந்த நூலில் 16 கலைகள் கூறப்பட்டுஇள்ளன. இவை பிரசாதம் என்னும் யோகக் கலைகள். யோகம் என்பது ஒருமை-ஒடுக்கம். அதாவது ஒரு நிலையில் குறிப்பிட்ட கால அளவு உள்ளத்தையும் உடலையும் ஒருநிலைப்படுத்தி ஒடுங்கியிருத்தல். மூச்சை இவ்வாறு ஒடுக்குதலும் ஒரு யோகப் பிரசாதம்.

16 கலைகளில் ஒன்றான 'சூரிய வணக்கம்' என்னும் கலை

இந்த நூலில்

  • வன்னம் ஒடுங்கியிருக்கும் பாங்கு
  • தானம்
  • அளவு
  • வடிவு
  • தேவதை
  • மனநிலை
  • சோதனைப்படும் தன்மை
  • மாத்திரை
  • சூனியநிலை ஆறு வகை

முதலானவை கூறப்பட்டுள்ளன.


சிற்றம்பல நாடிகள் வழியே வந்த பரம்பரையினர் இந்த 16 நெறியைக் கூறுகின்றனர். பிற சைவ சித்தாந்தக் குருமார்களும் மாணாக்கர்களும் இதனைக் காட்டவில்லை. தருமபுரத்தில் இதற்கென்று 16 பகுதி கொண்ட மண்டபம் ஒன்று உண்டு. இதில் இந்தப் பரம்பரையினர் இந்த 16 கலைகளைப் பயிற்சி செய்து காட்டிக் கற்பித்துவந்தனர்.

இந்த நூல் தரும்புரம் ஆதீனத்தால் 1972-ல் அச்சிடப்பட்டுள்ளது.

கருவிநூல்

மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. ஷட்கம்
  2. கட்டம்
  3. 5 ஆம் நூற்றாண்டு
  4. மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல், வேதாதி நூலில் விளங்கும் பாராபரை (திருமந்திரம் 1070) உமையம்மை 16 இருக்கை நிலைகளில் காட்சி தருவாளாம்.