சொ. சாந்தலிங்கம்

முனைவர் சொ. சாந்தலிங்கம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம், நீராவி ஊராட்சியில் உள்ள நீராவி எனும் கிராமத்தில் சொக்கையா என்ற நெசவாளருக்குப் பிறந்தவர். விருதுநகரில் இளங்கலை விலங்கியல் படிப்பை முடித்த இவர், மதுரை தியாகராசர் கலைக் கல்லூரியில் முதுகலைப் படிப்பில் தமிழ் இலக்கியத்தை முடித்தார். பின்னர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடத்திய கல்வெட்டியல் படிப்பில் பட்டயக் கல்வியைப் பயின்றார். தொண்டை மண்டலம்:நாடுகளும் ஊர்களும் எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழகத் தொல்லியல் துறையில் பணியில் சேர்ந்து, இறுதியில் உதவி இயக்குநராகப் பணி ஓய்வு பெற்றார். தற்போது இவர் மதுரையில் வாழ்ந்து வருகிறார்.[1]

14 ஆகத்து 2022 அன்று மதுரையில் நடந்த விக்கிமேனியாவில் உரையாற்றும் சொ. சாந்தலிங்கம்

இவர் தற்போது பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாராக உள்ளார்.[2] மேலும் முனைவர் சொ. சாந்தலிங்கம், தொல்லியல் கழகம் எனும் அமைப்பின் துணைத்தலைவராக உள்ளார்.[3]

இயற்றிய நூல்கள்

இவர் வரலாற்றில் தகடூர் , சித்திரமேழி, மதுரையில் சமணம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.[4] இவர் பொ. இராசேந்திரனுடன் இணைந்து கோயில் கலை, மாமதுரை ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.[5][6] மேலும் திருக்கோயில் உலா என மொத்தம் ஏழு தமிழ் நூல்களை இயற்றியுள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சொ._சாந்தலிங்கம்&oldid=28157" இருந்து மீள்விக்கப்பட்டது