சைமன் கே. கிங்
சைமன் கே. கிங் (Simon K. King) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் சசியின் ஐந்து ஐந்து ஐந்து (2013) படத்தின் வழியாக அறிமுகமானார். மேலும் சத்யா திரைப்படத்தின் "யவ்வானா" என்ற பாடலுக்காகவும், கொலைகாரன் படத்தின் பின்னணி இசைக்காகவும் நன்கு அறியப்பட்டார்.
சைமன் கே. கிங் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | கே. எஸ். சைமன் |
பிற பெயர்கள் | சைமன் கே. கிங் ,சைமன் |
பிறப்பு | இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை |
இசை வடிவங்கள் | திரைப்பட இசை, ஜாஸ், புளூஸ் |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், கலைஞர், இசை இயக்குனர், பாடகர், பாடல் எழுத்தாளர் |
இசைக்கருவி(கள்) | சிந்தசைசர், பியானோ, இசைப்பலகை, கிட்டார் |
இசைத்துறையில் | 2013–தற்போது வரை |
தொழில்
சைமன் கே. கிங் மின் பொறியியலில் பட்டப்படிப்பை மேற்கொண்டபோது கீபோர்டு புரோகிராமராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவர் இசையமைத்தலில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அப்போதிருந்து இவர் விளம்பரங்களுக்கான இசையமைக்கத் தொடங்கினார். அப்போது இவர் பல்வேறு வணிகப் பொருட்களுக்காக 300 க்கும் மேற்பட்ட விளம்பர இசையமைப்புகளில் பணிபுரிந்தார். அதே நேரத்தில் இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைப்படத் துறைகளில் பல இசை இயக்குநர்களுக்கு சுயாதின இசை தயாரிப்பாளராக பணியாற்றினார். [1]
இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு
ஆண்டு | படத்தின் பெயர் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2013 | ஐந்து ஐந்து ஐந்து | தமிழ் | |
2015 | ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி | தமிழ் | |
2017 | சத்யா | தமிழ் | |
2019 | கொலைகாரன் | தமிழ் மற்றும் தெலுங்கு | தெலுங்கில் கில்லர் என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது |
2019 | மார்க்கெட் ராஜா எம்.பி.எஸ் | தமிழ் | |
2019 | கான்ராக்ட் /இருவர் ஒப்பந்தம் /இத்தரு | தெலுங்கு, கன்னடம், தமிழ் | பின்னணி இசை மட்டுமே. |
2019 | ராஜபீமா | தமிழ் | |
2020 | அசுரகுரு | தமிழ் | பின்னணி இசை மட்டுமே. |
2021 | கபடதாரி | தமிழ் | |
2021 | கபடதாரி | தெலுங்கு | |
2022 | WWW | தெலுங்கு |
குறிப்புகள்
- ↑ Interview with Simon, music director of Ainthu Ainthu Ainthu (555) | Musicperk – Trending news, analysis, reviews, ratings and exclusive content for music பரணிடப்பட்டது 2018-12-16 at the வந்தவழி இயந்திரம். Musicperk. Retrieved on 12 November 2015.