செ. சீனி நைனா முகம்மது

செ. சீனி நைனா முகம்மது (11 செப்டம்பர் 1947 – 7 ஆகத்து 2014) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனைப் பெயர்களாலும் அறியப்பட்டவர். கவிதை இலக்கணத்தை முறையாகக் கற்று அதனைப் பிறருக்கும் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் விளங்கினார். சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இஸ்லாமியச் சமய உரைகளும் நிகழ்த்தினார்.

செ. சீனி நைனா முகம்மது
செ. சீனி நைனா முகம்மது
இயற்பெயர்/
அறியும் பெயர்
செ. சீனி நைனா முகம்மது
பிறந்ததிகதி செப்டம்பர் 11, 1947
இறப்பு ஆகத்து 7, 2014(2014-08-07) (அகவை 66)[1]
குடியுரிமை மலேசியர்
அறியப்படுவது கவிஞர்
தமிழறிஞர்
சமய உரையாளர்
இதழாசிரியர்

எழுத்துத் துறை

1961 தொடங்கி இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டார். இவரின் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள் ஆகியவை மலேசிய, தமிழக பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளியாகியுள்ளன. வானொலி, மேடைக் கவியரங்கங்களில் பாடியும் வந்தார்.

பத்திரிகைத்துறை

இவர் ஓர் இதழாசிரியருமாவார்.

  • பெர்மிம் பேரவையின் "நம் குரல்" இஸ்லாமிய மாத இதழின் ஆசிரியர் (1980-86)
  • பினாங்கிலிருந்து வந்த "மலேசிய நண்பன்" நாளிதழின் செய்தி ஆசிரியர் (1988)
  • "உங்கள் குரல்" திங்களிதழின் ஆசிரியர்இ வெளியீட்டாளர் (1998-).

பரிசுகள்

  • "தமிழ் நேசன்" ஞாயிறு கவியரங்கத்தில் இரு முறை பரிசு பெற்றுள்ளார் (1966);
  • கீழ்ப் பேரா இலக்கிய வட்டத்தின் மாதந்தர சிறந்த கவிதைக்கான பரிசு (1974);
  • தமிழ் நாடு மதுரையில் வெளிவந்த "குரானின் குரல்" வெள்ளிவிழாக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு (1979).

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=செ._சீனி_நைனா_முகம்மது&oldid=6273" இருந்து மீள்விக்கப்பட்டது