செ. சந்தனசாமி
செ. சந்தனசாமி (பிறப்பு: 1927) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் இதழாசிரியராகப் பணியாற்றி வருகின்றார். எழுத்துறையில் இவர் 'வேதியர்' எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1972 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். வானொலி நாடகங்கள், மேடை நாடகங்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
நூல்கள்
- "அன்புக் கனி"
- "கவிதைக் கனிகள்"
- "தியாக உள்ளம்"
- "உறவு மலர்ந்தது"