செல்வராகவன்

செல்வராகவன் (Selvaraghavan, பிறப்பு: 5 மார்ச்சு 1976) ஓர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது தம்பி பிரபல நடிகர் தனுஷ். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனும் ஆவார்.[1]

செல்வராகவன்
Selvaraghavan at the ‘NGK’ Audio & Trailer Launch.jpg
பிறப்பு5 மார்ச்சு 1976 (1976-03-05) (அகவை 48)
தேனி, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2003 –தற்போது வரை
சமயம்இந்து
பெற்றோர்கஸ்தூரி ராஜா
விஜயலட்சுமி
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்லீலாவதி
ஓம்கார்
ரிஷிகேஷ்
உறவினர்கள்தனுஷ் (சகோதரன்)
விமலா கீதா (சகோதரி)
கார்த்திகா தேவி (சகோதரி)

குடும்பம்

செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் தான் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்துகொண்டனர்.[2] 2011 ஆம் ஆண்டில் தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.[3] இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார் , ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.[4]

இவர் இயக்கியுள்ள திரைப்படங்கள்:

இயக்குனர் மற்றும் எழுத்தாளராக

ஆண்டு திரைப்படம் பதவி மொழி குறிப்புகள்
இயக்குனராக எழுத்தாளராக
2002 துள்ளுவதோ இளமை  N  Y தமிழ்
2003 காதல் கொண்டேன்  Y  Y தமிழ்
2004 7ஜி ரெயின்போ காலனி  Y  Y தமிழ்
2006 புதுப்பேட்டை  Y  Y தமிழ்
2007 ஆதவரி மடலக்கு அர்தலு வெருலே”  Y  Y தெலுங்கு
2008 யாரடி நீ மோகினி  N  Y தமிழ்
2010 ஆயிரத்தில் ஒருவன்  Y  Y தமிழ்
2011 மயக்கம் என்ன  Y  Y தமிழ்
2013 இரண்டாம் உலகம்  Y  Y தமிழ்
2016 மாலை நேரத்து மயக்கம்  N  Y தமிழ்
2016 நெஞ்சம் மறப்பதில்லை  Y  Y தமிழ்
2019 என். ஜி. கே  Y  Y தமிழ்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=செல்வராகவன்&oldid=21024" இருந்து மீள்விக்கப்பட்டது