செங்கோட்டை வட்டம்

செங்கோட்டை வட்டம் , தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இந்த வட்டத்தின் தலைமையகமாக செங்கோட்டை நகரம் உள்ளது. இவ்வட்டத்தில் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் இலத்தூர், பண்பொழி, செங்கோட்டை என 3 குறுவட்டங்களும், 18 வருவாய் கிராமங்களும் உள்ளன. [2]

வருவாய் கிராமங்கள்

  1. இலத்தூர்
  2. கணக்குப்பிள்ளைவலசை
  3. கற்குடி
  4. குன்னக்குடி
  5. செங்கோட்டை கீழூர்
  6. செங்கோட்டை நகரம்
  7. செங்கோட்டை மேலூர்
  8. தேன்பொத்தை
  9. நாகல்காடு
  10. நெடுவயல்
  11. பண்பொழி
  12. பூலாங்குடியிருப்பு
  13. புதூர்
  14. பிரானூர்
  15. புளியரை
  16. பெரியபிள்ளைவலசை
  17. மேக்கரை
  18. வடகரை கீழ்பிடாகை
  19. வடகரை மேல்பிடாகை
  20. வல்லம்

புவியியல்

செங்கோட்டை வட்டம், தமிழக - கேரளா எல்லையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதனருகே புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குற்றாலம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

சமயம்

  • இந்துக்கள் = 72.37%
  • இசுலாமியர்கள் = 24.98%
  • கிறித்தவர்கள் = 2.59%
  • பிறர்= 0.05%

வரலாறு

செங்கோட்டை வட்டம் 1956 வரை கேரள மாநில அரசின் கீழ் இருந்தது. இங்கு வாழும் மக்களின் தாய்மொழி தமிழ். மேலும் கேரள அரசால் இப்பகுதியின் வளர்ச்சி தடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து நாகர்கோவிலைச் சேர்ந்த மார்ஷல் நேசமணி, கஞ்சன் நாடார், சிதம்பரம் பிள்ளை நாடார் ஆகியோருடன் சேர்ந்து செங்கோட்டை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின் தமிழக முதல்வர் காமராஜர் முயற்சியால் இப்பகுதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=செங்கோட்டை_வட்டம்&oldid=128765" இருந்து மீள்விக்கப்பட்டது