சூரியானந்தர்

சூரியானந்தர் ஒரு சித்தர். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரால் பாடப்பட்டவை இரண்டு நூல்கள்.

சூரியானந்தர் பதின்மூன்று,
சூரியானந்தர் இருபத்தைந்து
என்பன அவை. இரண்டும் இரசவாதம் [1] பற்றிக் கூறுகின்றன.

உடல் உறுப்புகளால் செய்யப்படும் பயிற்சிகளை இவர் ‘தீட்சை’ என்கிறார்.[2] உடலின் உள்ளுறுப்புகளைத் தூய்மை செய்வதை இவர் ‘சவுக்காரம்’ என்று குறிப்பிடுகிறார்.

பாடல் (எடுத்துக்காட்டு) [3]

சொல்வது என்ன ரேசகத்தை [4] வெளிவிடாதே

துடியான பூரகத்தைப் [5] பின்னிடாதே

வெல்வது என்ன கும்பகத்தை [6] அடிவிடாதே

மேலேற்று மாத்திரையை [7] மறந்திடாதே

செல்வது என்ன கற்பகத்தை [8] மறந்திடாதே

செந்தூரம் [9] சேர்க்கையிலே சிதறிடாதே

கொல்வது என்ன அமுர்து [10] அயிலே பறக்கும் இந்த

குளிகைக்குச் [11] சாரணை [12] செய் குணமும் மாற்றே

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. வாதம் என்னும் மூச்சுப் பயிற்சியால் உடலின் ஊறல்களைக் (gland) கட்டுக்குள் கொண்டுவருவது
  2. கொங்கணர் தீட்சை மார்க்கம், தச தீட்சை, அஞ்சு தீட்சை என்பன இவற்றில் சில வகைகள்.
  3. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டுள்ளது
  4. வெளிவிடு மூச்சு
  5. உள்வாங்கு மூச்சு
  6. அடக்கும் மூச்சு
  7. மூச்சின் கால-அளவு
  8. மலவாயில் பயிற்சி
  9. விந்து
  10. அமிழ்தம் என்னும் பேரின்பம்
  11. தூய்மை
  12. பயிற்சி
"https://tamilar.wiki/index.php?title=சூரியானந்தர்&oldid=17272" இருந்து மீள்விக்கப்பட்டது