சு. முத்தையா
சுப்பையா முத்தையா (Subbiah Muthiah, 13 ஏப்ரல் 1930 - 20 ஏப்ரல் 2019)[1], இலங்கை-இந்திய ஊடகவியலாளரும், வரலாற்றாளரும் ஆவார். பழமையான கட்டடங்கள், தொன்மையான கலாச்சாரம், தண்மையான சூழ்நிலையைக் காப்பதில் பேரார்வம் கொண்டவர்.[2] சென்னையிலிருந்து வெளிவந்த மாதமிருமுறை இதழான மெட்ராஸ் மியூசிங்ஸ் இதழின் நிறுவன ஆசிரியராகப் பணியாற்றியவர். சென்னை வரலாறு, பண்பாடு பற்றி நிறைய நூல்களை எழுதியுள்ளார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
எஸ். முத்தையா |
---|---|
பிறந்ததிகதி | 13 ஏப்ரல் 1930 |
பிறந்தஇடம் | பள்ளத்தூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 20 ஏப்ரல் 2019 | (அகவை 89)
பணி | ஊடகவியலாளர் |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | சென்னை வரலாறு பற்றிய நூல்கள், சூழியல் காப்பு நடவடிக்கைகள் |
துணைவர் | வள்ளியம்மை |
பிள்ளைகள் | ரஞ்சனி, பார்வதி |
ஆரம்ப வாழ்க்கை
முத்தையா தமிழ்நாடு சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூர் என்ற நகரில் நாட்டுக்கோட்டை நகரத்தார் குடும்பம் ஒன்றில் 1930 ஆம் ஆண்டில் பிறந்தார்.[3] தந்தை என். எம். சுப்பையா செட்டியார் (1905-2002) பிரித்தானிய இலங்கையில் பங்குத்தரகராகவும், கொழும்பு நகர முதல்வராகவும் பணியாற்றி, 1939 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இலங்கை இந்தியக் காங்கிரசு என்ற அரசியல் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தவர்.[4] முத்தையா தனது ஆரம்பக் கல்வியைக் கொழும்பு மகளிர் கல்லூரியிலும், புனித தோமையர் ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியிலும் கற்றார்.[5] தோமையர் பாடசாலை முதல்வரான டபிள்யூ. டி. கீபிளின் ஊக்கத்தின் பேரில் பள்ளி இதழான தோமியனில் எழுத துவங்கினார். 1946 ஆம் ஆண்டில் இந்தியாவில் மெட்ரிக்குலேசன் முடித்து, 1946 முதல் 1951 வரை ஐக்கிய அமெரிக்காவில் தந்தையின் விருப்பத்தின் பேரில் கட்டடப் பொறியியலும், தன் விருப்பத்திற்காக அரசியல் அறிவியலும் படித்தார். அமெரிக்காவில் இருந்த போது கல்லூரியின் இதழ்களில் நிறைய எழுதி, நிறைய கற்றுக்கொண்டார். அமெரிக்காவில் பன்னாட்டுத் தொடர்பில் முதுகலைப் பட்டம் பெற்று 1951 இல் இலங்கை திரும்பினார்.
பணிகள்
1951 இல் டைம்ஸ் ஒஃப் சிலோன் பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணி புரிந்து, இறுதியில் பத்திரிகையின் ஞாயிறு இதழின் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்றார்.[6] இலங்கையின் குடியுரிமை பெறாததால், 1968 ஆம் ஆண்டில் குடியுரிமைச் சட்டம் இறுக்கமான போது, தனது பதவியைத் துறந்து, இந்தியா திரும்பினார்.[6]
இலங்கை, சென்னை வரலாறு உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மெரினா கடற்கரையிலுள்ள பழமை வாய்ந்த டி.ஜி.பி. அலுவலகம் இடிக்கப்படுவதைத் தடுக்கப் பாடுபட்டவர். இங்கிருக்கும் பழமையான ஒவ்வொரு பொருளையும் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்ட்டவர்.[7]
மறைவு
முத்தையா 2019 ஏப்ரல் 20 அன்று தனது 89-வது அகவையில் சென்னையில் காலமானார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[1][8][9]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Rao, manasa (2019-04-20). "Master chronicler of Madras no more: S Muthiah passes away at 89". https://www.thenewsminute.com/article/master-chronicler-madras-no-more-s-muthiah-passes-away-89-100395.
- ↑ "Chennai". lifeinchennai.com இம் மூலத்தில் இருந்து 13 செப்டம்பர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090913101522/http://www.lifeinchennai.com/chennai.htm. பார்த்த நாள்: 27 July 2009.
- ↑ Gautam, Savita (3 November 2002). "Crusader for Chennai". தி இந்து இம் மூலத்தில் இருந்து 28 பிப்ரவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040228070455/http://www.hindu.com/thehindu/mp/2002/03/11/stories/2002031100160200.htm.
- ↑ "Subbiah Muthiah". Viator Publications இம் மூலத்தில் இருந்து 2009-08-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090804132319/http://www.viator-publications.com/pp.php?ipp=50.
- ↑ Muthiah, S.. "GO, THORA, GO; THOMIANS BECOME ASIAN SCHOOLS ROWING CHAMPIONS". St Thomas' College, Gurutalawa. http://www.stcg62group.org/PDF/Articles/74_Go_Thora_Go.pdf.
- ↑ 6.0 6.1 Ghosh, Bishwanath (4 April 2011). "Muthiah Discovered". The Hindu. http://www.thehindu.com/life-and-style/metroplus/article1696891.ece.
- ↑ தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்15
- ↑ "S. Muthiah, chronicler of Chennai, is no more". தி இந்து. 20-04-2019. https://www.thehindu.com/society/history-and-culture/s-muthiah-chronicler-of-chennai-is-no-more/article26899166.ece. பார்த்த நாள்: 21-04-2019.
- ↑ "In the passing of S. Muthiah, Madras loses its chronicler". தி இந்து. 20-04-2019. https://www.thehindu.com/news/cities/chennai/s-muthiah-obituary-madras-loses-its-chronicler/article26899453.ece. பார்த்த நாள்: 21-04-2019.
வெளி இணைப்புகள்
- Article on chennaionline பரணிடப்பட்டது 2008-07-04 at the வந்தவழி இயந்திரம்
- மெட்ராஸ் மியூசிங்ஸ்
- Subbiah Muthiah's profile in Viator Publications website பரணிடப்பட்டது 2009-08-04 at the வந்தவழி இயந்திரம், Retrieved on 2009-09-04.