சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன்[சான்று தேவை] (பிறப்பு: சூன் 10, 1972), இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில் நுட்ப மேலாளர் ஆவார்.[1][2][3] இவர் அல்பபெட் (Alphabet Inc.) மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுள் முதன்மை செயல் அலுவலர் ஆவார்.[4]

சுந்தர் பிச்சை
Sundar Pichai - 2023 (cropped).jpg
பிறப்புசூன் 10, 1972 (1972-06-10) (அகவை 52)
மதுரை , தமிழ் நாடு, இந்தியா
வாழிடம்கலிபோர்னியா, அமெரிக்கா
தேசியம்]]
கல்வி கற்ற இடங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர்

இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்

வார்ட்டன் மேலாண்மைப் பள்ளி
அறியப்படுவதுகூகிள் குரோம் இயக்குதளம்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில், மதுரை மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார்.[5] இவர் சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் வார்ட்டன் மேலாண்மைப் பள்ளியில் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

பணி

சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார்[6]. கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர்,[2][7][8][9][10][11] கூகுள் உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டு உருவாக்கம் நிறைவுற்ற பிறகு, கூகுளின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பேற்க உள்ளார். 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் திகதி முதல் ஆல்பாபெட்டு என்ற நிறுவனத்தின் தலைவர்களாக இருந்த லாரி பேஜ் மற்றும் சேர்ஜி பிரின் ஆகியோர் விலகி இவரை இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளார்கள். [12]

விருது

  • பத்மபூசண் விருது (2022)

மேற்கோள்கள்

  1. "Google's Sundar Pichai too in race to head Microsoft?". Times of India. 2 February 2014. http://timesofindia.indiatimes.com/tech/tech-news/internet/Googles-Sundar-Pichai-too-in-race-to-head-Microsoft/articleshow/29732831.cms. பார்த்த நாள்: 4 February 2014. 
  2. 2.0 2.1 "Sundar Pichai; man who runs Chrome at Google". Siliconindia.com. 12 May 2011. http://www.siliconindia.com/shownews/Sundar_Pichai_man_who_runs_Chrome_at_Google-nid-83441-cid-3.html. பார்த்த நாள்: 15 November 2012. 
  3. "More Intresting Facts about Pichai Sundararajan". TNP LIVE (Hyderabad, India). 11 August 2015. http://www.telangananewspaper.com/alphabet-pichai-sundararajan/. 
  4. "G is for Google". Official Google Blog. http://googleblog.blogspot.com/2015/08/google-alphabet.html. 
  5. "Sundar Pichai and the world of Indian CEOs". http://www.bbc.com/news/world-asia-india-33861128. 
  6. "ஆன்டி ரூபினுக்குப் பிறகு சுந்தர்பிச்சை ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் தலைவரானார்.". வயர்டு(Wired). http://www.wired.com/gadgetlab/2013/03/andy-rubin-leaving-android/. பார்த்த நாள்: மார்ச்சு 17, 2013. 
  7. http://www.engadget.com/2014/10/24/sundar-pichai-man-with-the-plan/
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-10-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141028121612/http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=114907. 
  9. "Google's Sundar Pichai too in race to head Microsoft?". Times of India. 2 February 2014. http://timesofindia.indiatimes.com/tech/tech-news/internet/Googles-Sundar-Pichai-too-in-race-to-head-Microsoft/articleshow/29732831.cms. பார்த்த நாள்: 4 February 2014. 
  10. "Google's latest star was IIT Kharagpur topper". Times of India. 16 March 2013 இம் மூலத்தில் இருந்து 2 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131102042546/http://articles.timesofindia.indiatimes.com/2013-03-16/other-news/37766973_1_sundar-pichai-chrome-os-iit-kharagpur. பார்த்த நாள்: 16 March 2013. 
  11. Cooper, Charles (13 March 2013). "Chrome head Sundar Pichai takes over Android". CNET. http://news.cnet.com/8301-1023_3-57574104-93/google-shakeup-chrome-head-sundar-pichai-takes-over-android/. பார்த்த நாள்: 14 March 2013. 
  12. Pichai's Promotion Gives $2 Billion Windfall To Google Co-Founders[தொடர்பிழந்த இணைப்பு]NDTV

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சுந்தர்_பிச்சை&oldid=27093" இருந்து மீள்விக்கப்பட்டது