சுக. சுப்ரமணியம்

சி. சுப்பிரமணியம் (பிறப்பு: அக்டோபர் 2 1935) மலேசிய எழுத்தாளர்களுள் ஒருவராவார். சுக. சுப்ரமணியம் எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்ற இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமாவார்.

சுக. சுப்ரமணியம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
சுக. சுப்ரமணியம்
பிறப்புபெயர் சி. சுப்பிரமணியம்
பிறந்ததிகதி அக்டோபர் 2 1935
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1950 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சமய, சமுதாயக் கட்டுரைகளை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

நூல்கள்: தொகுப்புகள்

  • "திருமுருகன் பாமாலை" (1993);
  • "கதம்பமாலை" (1996);
  • "ஜொஹொர் பாரு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய திருக்குட நன்னீராட்டு விழா மலர்" (1996).

பரிசில்களும், விருதுகளும்

  • அரசாங்க PIS விருது(1980)
  • தமிழாசிரியர் சேவைக்காகத் "தொண்டர்மணி" விருது (1990)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=சுக._சுப்ரமணியம்&oldid=6264" இருந்து மீள்விக்கப்பட்டது