சீவசம்போதனை

சீவசம்போதனை என்பது சிறப்பான சமணமத நூல்களில் ஒன்று இந்த நூலின் இறுதியில் உள்ள பாடல் ஒன்று இந்நூலின் ஆசிரியர் தேவேந்திர மாமுனிவர் எனக் குறிப்பிடுகிறது. இது 14 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் சமயக் கிளர்ச்சி தோன்றிய காலத்து நூல்.

நூலில் 500 வெண்பாக்களும், மணிப்பிரவாள நடையில் அமைந்த அவற்றிற்கான உரையும் அடங்கிய நூல் இது.

நூல் காட்டும் செய்திகள்

  • 12 சமண நாட்டங்கள் 12 கதைகள் மூலம் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன.
  • நூலிலுள்ள வெண்பா நடை நளவெண்பா நூலை நிழலாடச் செய்கிறது. நளவெண்பாவைப் பயின்றபின் எழுதப்பட்ட நூல்.
  • ஒப்புமை
    • கோகனகப் பூக்கண்டு கொட்டியும் பூவாது ஒழிந்தில – நளவெண்பா
    • மட்டு அவிழும் பங்கயங்கள் பூத்த மருவகத்தே கொட்டிகளும் தோடு அவிழ்ந்தாற் போலவே.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/index.php?title=சீவசம்போதனை&oldid=17266" இருந்து மீள்விக்கப்பட்டது