சி. சொக்கலிங்கம்


சி. சொக்கலிங்கம் (பிறப்பு: சனவரி 4, 1939), மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தனது தொடக்கக் கல்வியை கிள்ளான் வாட்சன் தமிழ்ப் பள்ளியிலும், இடைநிலைக் கல்வியை மெதடிஸ்ட் ஆங்கிலப்பள்ளியிலும் பயின்றார். அதன் பின் தஞ்சை மருத்துவக்கல்லூரியில் பயின்று முழு நேர மருத்துவத் தொழில் புரியும் இவர் இலக்கியத்துறையிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார். சிதம்பரன், நடராஜ் போன்ற புனைப்பெயர்களிலும் இவர் எழுதிவருகிறார்.

சி. சொக்கலிங்கம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
சி. சொக்கலிங்கம்
பிறந்ததிகதி சனவரி 4, 1939
அறியப்படுவது எழுத்தாளர்

இலக்கிய ஈடுபாடு

1955-1957 ஆம் ஆண்டுகளில் 'இளைஞன் குரல்' எனும் கையெழுத்து ஏட்டை நடத்தி பத்திரிகை துறையில் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். இவரது முதல் சிறுகதை 'ஆண்டவன் கூலி' என்ற தலைப்பில் 1968-ஆம் தமிழ் நேசன் ஞாயிறு பதிப்பில் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து இதுவரை 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் படைத்துள்ளார்.

நாவல்கள்

  • மனவீணை - 1990
  • கோவில் முழுவதும் கண்டேன் - 1984
  • குழலி - 1988
  • பேசும் ஊமைகள் - 1991

சிறுகதைத் தொகுப்புகள்

  • துணை - 1982
  • உன்னையன்று கேட்பேன் - 1986

கட்டுரை நூல்கள்

  • இந்தப் பயணம் தொடரும் - 1985
  • மனதுக்கினிய சைவ சமயம் - 1987

கவிதை நூல்

  • நிலவொளி மலர்கள்

தொடர்கதைகள்

  • இவர்கள் வித்தியாசமானவர்கள் - 1990
  • சுவர் - 1992

பரிசும் பாராட்டும்

  • இவரது 'மண வீணை' நூல், சென்னைத் தமிழ் வளர்ச்சி மன்றத்தால் சிறந்த நாவலாக பரிசு பெற்றது (1992).
  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான பரிசும் மாராட்டும் வழங்கி சிறப்பித்தது (1990).
  • மருத்துவ மாணிக்கம் (1986)
  • இலக்கியச் செம்மல்'
  • 'எழுத்து வேந்தன்' (1990, 1992)

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=சி._சொக்கலிங்கம்&oldid=6237" இருந்து மீள்விக்கப்பட்டது