சிவா செல்லையா
சிவா செல்லையா (Siva Selliah, 1924–1997) இலங்கைத் தமிழ் நீதிபதியும், இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், உயர்நீதிமன்ற, மற்றும் நீதித்துறை நடுவரும் ஆவார்.[1] இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மெலவை உறுப்பினராகவும் இருந்தார்.
சிவா செல்லையா Siva Selliah | |
---|---|
இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1924 கொழும்பு, இலங்கை |
இறப்பு | 1997 கொழும்பு, இலங்கை |
தேசியம் | இலங்கை |
துணைவர் | பவானி செல்லையா |
உறவுகள் | சர் அருணாசலம் மகாதேவா, நீதிபதி வி. மாணிக்கவாசகர் |
பிள்ளைகள் | சிவகுமார், செல்வலட்சுமி, சிவகாமி |
வாழிடம்(s) | ரொசுமீது பிளேசு, கறுவாத் தோட்டம், கொழும்பு, இலங்கை |
முன்னாள் கல்லூரி | இலங்கை சட்டக் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி |
சிவநாதன் செல்லையா என்ற இயற்பெயர் கொண்ட சிவா செல்லையா 1924 ஆம் ஆண்டில் கொழும்பில் நல்லதம்பி செல்லையா என்பவருக்குப் பிறந்தார். தந்தை ஒரு பங்குத் தரகர். கொழும்பு றோயல் கல்லூரியில் கலி பயின்ற சிவநாதன் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞரானார்.[2]
சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றிய பின்னர் நீதித்துறையில் நுழைந்தார். நீதித்துறை நடுவராகப் பணியாற்றிய பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். 1987 ஆம் ஆண்டில் இளைப்பாறும் வரை இவர் இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.[3]
மேற்கோள்கள்
- ↑ http://www.commonlii.org//cgi-bin/disp.pl/lk/cases/LKCA/1987/16.html?query=siva%20selliah
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-06-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120606145400/http://www.nation.lk/2007/01/14/opini.htm.
- ↑ http://sundaytimes.lk/980614/newsm.html
வெளி இணைப்புகள்
- [1] பரணிடப்பட்டது 2013-11-27 at the வந்தவழி இயந்திரம்