சிவானந்த போதம்

சிவானந்த போதம் என்னும் பெயரில் ஒரு நூல் இருந்தது என்பதை 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிவானந்த போத சாரம் என்னும் நூலால் அறியமுடிகிறது. இந்தச் ‘சார’ நூல் 30 அவதாரங்களைக் கூறுவதால் சிவானந்த போத நூலில் இவை விரிவாக விளக்கப்பட்டிருக்கும் என அறியமுடிகிறது. சிவானந்த போத நூலின் காலம் 15 ஆம் நூற்றாண்டு. இது மெய்கண்ட பரம்பரை போற்றும் நூல்.

சிவானந்த போதம் என்னும் பெயரில் 18 ஆம் நூற்றாண்டில் தோன்றிய மற்றொரு நூலும் உள்ளது. இது வீர சைவ நூல்.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://tamilar.wiki/index.php?title=சிவானந்த_போதம்&oldid=17258" இருந்து மீள்விக்கப்பட்டது