சிவாதா (நடிகை)

சிவாதா (Sshivada) என்ற தனது மேடைப் பெயரால் அறியப்பட்ட சிறீலேகா கே. வி (பிறப்பு 23 ஏப்ரல் 1986) ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளத் திரையுலகிலும், தமிழ்த் திரையுலகிலும் நடித்து வருகிறார்.

சிவாதா
Sshivada In 2022.jpg
பிறப்புசிறீலேகா கே. வி
23 ஏப்ரல் 1986 (1986-04-23) (அகவை 38)
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா[1]
மற்ற பெயர்கள்சிவாதா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011– தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
முரளி கிருட்டிணன் (2015)
பிள்ளைகள்1

சொந்த வாழ்க்கை

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் விசயராசன், குமாரி தம்பதியருக்கு சிறிலேகாவாக பிறந்தார். இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, இவரது குடும்பம் அங்கமாலிக்கு குடிபெயர்ந்தது. அங்கு இவர் அங்கமாலியின் விஸ்வஜோதி சி.எம்.ஐ பொதுப் பள்ளியில் கல்வி பயின்றார். இவர் 2008 ஆம் ஆண்டில் காலடி ஆதிசங்கரா பொறியியல் கல்லூரியில் கணினியியல் பொறியியல் பட்டதாரி ஆனார்.[2] இவர் தனது நீண்டகால காதலன் முரளி கிருட்டிணனை மணந்தார்.

தொழில்

2009இல் வெளியான கேரள கபே என்ற மலையாளத் திரைப்படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் இவருக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை. பின்னர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரிந்தபோது, மலையாளத் திரைப்பட இயக்குனர் பாசில் இவரைக் கண்டார். அவர் 2011 ஆம் ஆண்டு தனது லிவிங் டுகெதர் திரைப்படத்தில் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். [3] பின்னர் நெடுஞ்சாலை என்ற தமிழ் படத்தில் நடித்தார். [4] இவரது தாய்மொழி மலையாளம் என்றாலும், சிவாதா தனது முதல் படத்திற்கு சொந்தக் குரலில் பேசினார். சாலையோர உணவு விடுதி நடத்தும் மலையாள கிராமப் பெண்ணான மங்காவின் சித்தரிப்புக்காக பாராட்டு பெற்றார். சிஃபி தனது வளைதளத்தில் இவரது துணிச்சலான நடிப்பை பாராட்டியது. [5] திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் இவரை "பயங்கர புதுமுகம்"என்று அழைத்தார். [6] இயக்குநர் பாரத் பாலாவின் முன்னாள் உதவியாளர் இயக்குநராக அறிமுகமான சிவமோகா இயக்கிய ஜீரோ என்ற படத்தில், "நவீன கால மனைவியாகவும், மரபுவழியாகவும், சில பாரம்பரிய மதிப்புகளைப் பிடித்துக் கொண்டவராகவும்" பிரியா என்ற வேடத்தில் நடிக்கிறார். [7] மாயா பட புகழ் அசுவின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ,வாமிகா கப்பி ஆகியோருடன் நடிக்க மார்ச் 2017 இல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். .

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சிவாதா_(நடிகை)&oldid=22766" இருந்து மீள்விக்கப்பட்டது