சிவஞானபோத வகுடீகை

சிவஞானபோத வகுடீகை என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் [1] வாழ்ந்த சிற்றம்பல நாடிகள் என்னும் சித்தாந்தப் புலவரால் இயற்றப்பட்டது. சிற்றம்பல நாடிகளின் புலமையை உணர்ந்த அவரது ஆசிரியர் சிவஞான போதத்தை வகுத்தளித்துத் தருமாறு வேண்ட, சிற்றம்பல நாடிகள் இதனைச் செய்தார் எனக் கூறப்படுகிறது.

  • இந்நூல் விரிவுரை ஆதலின் ‘வகுடீகை’ எனப்பட்டது.
  • வகுடு என்னும் சொல் தலைமுடியைப் பிரித்தெடுக்கும் வாக்கைக் குறிக்கும். [2]
  • வகுளம் தலைமுடி வாக்கில் சூடிக்கொற்றும் ஒருவகை அணிகலன்.
  • வகுடீகை என்னும் சொல்லை ‘வகுடு ஈகை’ என்று பிரித்துப் பொருள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. இந்தச் செய்தி 16 ஆம் நூற்றாண்டு நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  2. வகுடு படம்
"https://tamilar.wiki/index.php?title=சிவஞானபோத_வகுடீகை&oldid=17241" இருந்து மீள்விக்கப்பட்டது