சிவஞானபோத உரை
சிவஞானபோதம் நூலுக்குப் பல உரைநூல்கள் நோன்றியுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை சில.
- ‘பாண்டிப்பெருமாள் விருத்தி’ என்னும் உரை இந்த நூலுக்கு எழுதப்பட்ட ‘பழைய உரை’
- 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான சுவாமிகள் சிவஞான போதத்தை விளக்கிச் ‘சிவஞான பாடியம்’ என்னும் பேருரை ஒன்று எழுதியுள்ளார்.
- 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவாகமத் தேர்ச்சி உள்ள ஒருவரின் உரை 1875-ல் அச்சாகி வெளிவந்துள்ளது.
- ‘திருவாவடுதுறை ஆதீனத்துப் பழைய உரை’ 1952-ல் வெளிவந்துள்ளது.
இவையேயன்றிப் பல புத்துரைகளும், வேதாந்த உரைகளும் வெளிவந்துள்ளன.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005