சிலப்பதிகாரக் குறிப்புரை

சிலப்பதிகாரக் குறிப்புரை என்பது சிலப்பதிகாரம் நூலுக்கு எழுதப்பட்ட முதலாவது உரை. சிலப்பதிகாரத்துக்கு எழுதப்பட்ட பழமையான உரைகள் மூன்று. 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அடியார்க்கு நல்லார் உரை. இவரது உரையில் குறிப்பிடப்பட்டுள்ள சிலப்பதிகார அரும்பத உரை. இந்த அரும்பதவுரையில் குறிப்பிடப்பட்டுள்ள அதற்கும் முந்திய உரை ஆகியவை அந்த மூன்று உரைகள்.

இவற்றில் காலத்தால் முந்தியதும், அரும்பதவுரையில் குறிப்பிடப்பட்டதுமான முதல் உரையே சிலப்பதிகாரக் குறிப்புரை.

இந்தக் குறிப்புரை கூறும் செய்திகளில் சில:

  • ஐயவித்துலாம், கைபெயரூசி என்பனவற்றிற்கு வேறு உரை சொல்வாரும் உளர். [1]
  • ஆடகமாடம் – திருவனந்தபுரம்; இரவிபுரம் என்பாரும் உளர். [2]
  • அன்றியும் சரிகம்பதநி என்பாரும் உளர். [3]
  • அரங்கம் – திருவரங்கம்; ஆற்றிடைக்குறை என்பாரும் உளர் [4]

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

  1. 15 அடைக்கலக்காதை 213
  2. ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன் 26 கால்கோள் காதை 52
  3. எழுத்து எழுத்து ஆக, வழு இன்று இசைக்கும் குழலோன் அரங்கேற்றுக் காதை 68-69 என்பதை விளக்கும்போது
  4. ஆற்று வீ அரங்கத்து, 10 நாடுகாண் காதை 156