சிற்றம்பலநாடி கலித்துறை

சிற்றம்பலநாடி கலித்துறை என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிற்றம்பல நாடிகளின் மாணாக்கர்களால் இயற்றப்பட்ட நூல். இதனைச் சைவ சித்தாந்தக் கருத்துக் கருவூலம் என்பர். இதில் 55 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் உள்ளன.

இந்த நூலில் சிற்றம்பல நாடிகள் ‘சிற்றைக்கு அதிபதி’ என்று போற்றப்பட்டுள்ளார். சிற்றை என்பது இவரது சமாதி உள்ள ‘சித்தர்காடு’ என்னும் இடமாகும். இந்த இடம் இக்காலத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கில் உள்ளது.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005