சிறில் மத்தியூ

களுவாதுவாகே சிறில் மத்தியூ (Caluadewage Cyril Mathew, 30 செப்டம்பர் 1912 – 17 அக்டோபர் 1989) இலங்கை சிங்கள அரசியல்வாதி ஆவார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற[1] களனித் தொகுதி உறுப்பினரும்,[2] ஜே. ஆர். ஜெயவர்தனாவின் 1977 அமைச்சரவையில் அமைச்சரும் ஆவார்.

சிறில் மத்தியூ
Cyril Mathew
கைத்தொழில், அறிவியல் விவகாரங்களுக்கான அமைச்சர்
பதவியில்
சூலை 1977 – 1984
முன்னவர் டிக்கிரி பண்டா சுபசிங்க
பின்வந்தவர் ரணில் விக்கிரமசிங்க
களனி தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1977–1989
முன்னவர் ஆர். எஸ். பெரேரா
பின்வந்தவர் எவருமில்லை
தனிநபர் தகவல்
பிறப்பு (1912-09-30)30 செப்டம்பர் 1912
இறப்பு 17 அக்டோபர் 1989(1989-10-17) (அகவை 77)
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
தொழில் அரசியல்வாதி

அரசியலில்

மத்தியூ ஐக்கிய தேசியக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக 1956 முதல் 1967 வரை பணியாற்றினார். பின்னர் அவர் அன்றைய கட்சித் தலைவரும் பிரதமருமாக இருந்த டட்லி சேனாநாயக்கவுடன் முரண்பட்டு பதவியில் இருந்து விலகினார்.[3]

இவர் சிங்களவர்களே! பௌத்தத்தைப் பாதுகாக்க எழுவீர் என்ற நூலை எழுதி சிங்களவர்களை தமது உரிமைகளைக் காக்க வரும் படி அறைகூவல் விடுத்தார்.

மத்தியூ ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக 1977 நாடாளுமன்றத் தேர்தலில் களனித் தொகுதியில் போட்டியிட்டு 56.04% வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] இவர் இலங்கைத் தமிழர்களின் அரசியலில் கடும்போக்கைக் கடைப்பிடித்தார்.[5] 1977 இல் ஜே. ஆர். ஜெயவர்தனாவின் அமைச்சரவையில் இடம்பெற்றார்.[6] 1983 சூலை தமிழருக்கு-எதிரான வன்முறைகளுக்கு இவரும் ஒரு முக்கிய பொறுப்பாளியாக இருந்தவர் என இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.[7][8] 1984 இல் தமிழ் சிறுபான்மையினரின் குறைகளைத் தீர்ப்பதற்காக ஜெயவர்த்தன அழைத்த மாநாட்டை பகிரங்கமாக விமர்சித்ததன் பின்னர் இவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட்டு, ஆளும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.[9] ஜயவர்தாவிற்குப் பின்வந்த அரசுத்தலைவர் ரணசிங்க பிரேமதாசா இவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டார். 1989 அக்டோபர் 17 இல் இவர் மாரடைப்பால் காலமானார்.

இவரின் மகன் நந்தா மத்தியூ ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து,[10] பின்னர் பல அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தார்.[11] இவர் பின்னர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராசபக்ச ஆட்சிக் காலத்தில் ஊவா மாகாண ஆளுனராகப் பதவி வகித்தார்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Hon. Mathew, Caluwadewage Cyril, M.P.". இலங்கை நாடாளுமன்றம். https://www.parliament.lk/members-of-parliament/directory-of-past-members/viewMember/2462. பார்த்த நாள்: 16 October 2017. 
  2. Peebles, Patrick (22 October 2015). Historical Dictionary of Sri Lanka. Rowman & Littlefield. பக். 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781442255852. https://books.google.com/books?id=50igCgAAQBAJ&pg=PA229&lpg=PA229&dq=MATTHEW,+CALUADEWAGE+CYRIL+dictionary&source=bl&ots=p9CB3QZ-BC&sig=pebol8y0ODIHqF4qb7Et485vAw0&hl=en&sa=X&redir_esc=y#v=onepage&q=MATTHEW%2C%20CALUADEWAGE%20CYRIL%20dictionary&f=false. 
  3. Perera. "Cyril Mathew revolted against Dudley in 1960s and JR in 80s : Can a Divided Party Rule a Nation?". Daily Mirror. http://www.dailymirror.lk/opinion/Cyril-Mathew-revolted-against-Dudley-in-1960s-and-JR-in-80s-Can-a-Divided-Party-Rule-a-Nation/172-174534. பார்த்த நாள்: 7 May 2020. 
  4. "Result of Parliamentary General Election 1977". Department of Elections, Sri Lanka. http://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1977.pdf. பார்த்த நாள்: 16 October 2017. 
  5. "The Peoples Alliance Government in Sri Lanka" இம் மூலத்தில் இருந்து 2005-05-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050514170716/http://www.whatnextjournal.co.uk/Pages/Back/Wnext5/Meryl.html. 
  6. Sri Lanka Year Book 1977. Department of Census and Statistics, Sri Lanka. பக். 17–18. http://noolaham.net/project/148/14702/14702.pdf. 
  7. Hoole, Rajan (3 September 2013). "July 1983: Ranil Wickremasinghe Followed Cyril Mathew". Colombo Telegraph. https://www.colombotelegraph.com/index.php/july-1983-ranil-wickremasinghe-followed-cyril-mathew/. பார்த்த நாள்: 16 October 2017. 
  8. வெலிக்கடை சிறைச் சுவர்களுக்குள் எதிரொலிக்கும் அவலக் குரல்கள், தினகரன், சூன் 30, 2018
  9. "Deaths". Washington Post (subscription required). 19 October 1989 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924184012/http://www.highbeam.com/doc/1P2-1218133.html. 
  10. "Hon. Mathew, Caluadewagey Nanda, M.P.". இலங்கை நாடாளுமன்றம். https://www.parliament.lk/members-of-parliament/directory-of-past-members/viewMember/2463. பார்த்த நாள்: 16 October 2017. 
  11. Volleyball needs revival, Prof. Vitharana

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சிறில்_மத்தியூ&oldid=24812" இருந்து மீள்விக்கப்பட்டது