சிம்ஸ் பூங்கா

சிம்ஸ் பூங்கா (Sim's Park) என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மலைப்பகுதியில், குன்னூரில் உள்ள ஒரு முதன்மையான சுற்றுலாத் தலமாகும். இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 1780 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கே அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் வரை செல்கிறது. குறைந்தபட்சம் 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இருக்கும். இந்தத் தோட்டத்தில் சராசரியாக 150 செ.மீ. மழை பொழிகிறது. இந்தப் பூங்கா 12 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துள்ளது.[1][2][3]

ரோசா மொட்டு

துவக்கம்

 
சிம்ஸ் பூங்காவில் ஒரு கூம்பலகன் (ஆண்) பறவை

இது ஒரு அசாதாரணமான தாவரவியல் பூங்கா இயற்கை வரையறைகளோடு நூறாண்டுகளுக்கு மேலாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது. இது திரு ஜே.டி. சிம்ஸ் மற்றும் மேஜர் முர்ரே ஆகியோரால் 1874 துவக்கி வளர்க்கப்பட்டது.[1] இந்த இயற்கையாக மரங்கள், புதர்கள், கொடிகள் போன்றவை உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இங்கு பல அரிய தாவர இனங்கள் உள்ளன. இந்த பூங்காவின் முக்கிய நிகழ்வு என்றால் மே மாதம் நடக்கும் வருடாந்திர பழம் மற்றும் காய்கறி கண்காட்சியைக் குறிப்பிடலாம்.[2][3][4]

சேகரிப்பும் அழகும்

இது ஒரு இயற்கை தோட்டமாக உள்ளது. பூங்காவின் உள்ளே அழகான மரங்கள், வண்ணமயமான மலர்கள், புல்வெளிகள், புதர்கள், கொடிகள் போன்ற பல்வேறு தாவரங்களை இந்தப் பூங்காவுக்காக உலகம் முழுவதும் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப் பட்டுள்ளன. தாவரங்களில் பல அசாதாரண மர இனங்கள் உள்ளன. ருத்ராட்ச மரம், தாளிசபத்திரி, குயின்ஸ்லாந்து கரி, பைன், ஹாண்ட்சம் ஆர்னமெண்டல் மரம் போன்ற அரிய மதிப்பு மிக்க மரங்களும், அரயுகரியா, கருவாலி மரம் , பீனிக்ஸ், மக்னோலியா, பைன், மர எண்ணெய், பெர்ன்ஸ் மரம், கமீல்லா போன்ற நயத்தகு மரங்களும் இங்கு உள்ளன. இந்த பூங்காவில். ஒரு கண்ணாடி வீட்டு உள்ளது. இதில் வெவ்வேறு அலங்காரச் செடிகள் மற்றும் மலர்கள் உள்ளன. பூங்காவின் மற்றொரு பக்கத்தில் ரோசா தோட்டமாக பராமரிக்கப்படுகிறது. இந்தப் பூங்காவில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 255 பேரினத்தின் 1000 க்கும் மேற்பட்ட இனத் தாவரங்கள் பல்வேறு குழுக்களை உள்ளடக்கியதாக உள்ளது.[1][2][3][4][5]

அம்சங்கள்

 
தேனீயின் மாலை உணவு

நீலகிரி ஒரு தனிப்பட்ட வெப்பமண்டல மலை காலநிலையைக் கொண்டுள்ளது, எனவே தோட்டத்தில் மலர்கள் மற்றும் மரங்கள் ஆகியவற்றை வளர்க்க சிறந்த காலநிலை உள்ளது. வெப்பநிலை மாறுபாடு குறைவாகவும், மழை அளவு சீராக இருப்பதன் விளைவாக இங்கு நீண்ட பூக்கும் பருவம் நிலவுகிறது, ஆயிரக்கணக்கான சுற்றுலாப்யணிகள் ஆண்டு முழுவதும் குளிர்காலத்தில் கூட இங்கு வருகின்றனர். பூங்கா சரிவுகளோடும் அதன் மீது நடைபாதைகளைக் கொண்டும் மிகவும் தனித்துவமான அழகியதாக உள்ளது. தோட்டத்தின் தலையாய அம்சமாக உள்ளது இங்கு நன்றாக பராமரிக்கப்படும் புல்வெளிகள், கண்களுக்கு விருந்தான பல்வேறு விதமான அழகிய பெரிய வண்ண வண்ண பூக்கும் தாவரங்களும் ஆகும்.[1][2][3]

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சிம்ஸ்_பூங்கா&oldid=41749" இருந்து மீள்விக்கப்பட்டது