சிந்தனை வெண்பா
சிந்தனை வெண்பா என்னும் நூல் சிவஞான வள்ளல் என்பவர் இயற்றிய 20 நூல்களில் ஒன்று. இது 35 வெண்பாக்களைக் கொண்ட நூல். இந்த நூலின் காலம் 15ஆம் நூற்றாண்டு.
திருஞான சம்பந்தரைப் போற்றிப் பாடப்பட்ட நூல் இது. மெய்கண்டார், வெண்காடர், எம்குரு, சிற்றம்பலவர், சுகர் ஆகிய ஐவரை இந்த நூல் ‘பூரணர்’கள் எனக் குறிப்பிடுகிறது. சான்றோர் என்னும் பழந்தமிழ்ச்சொல் பூரணர் ஆயிற்று. சாலும் என்றால் போதும் என்று பொருள். [1] பூரணம் என்பது பூரித்த நிறைவுநிலை.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
- ↑ அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது. - திருக்குறள்.