சித்தாந்தத் தொகை

சித்தாந்தத் தொகை மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று. 9 ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளத்தக்கது. பௌத்த சித்தாந்தம் முழுவதையும் தொகுத்துக் கூறும் ஒரு நூல் இது.

அருள்நெறியால் பாரமிதை ஆறைந்தும் உடனடக்கி
பொருள்முழுதும் போதிநிழல் நன்குணர்ந்த முனிவன்தன்
அருள்மொழியான் நல்வாய்மை அறிந்தவரே பிறப்பறுப்பார்
மருள்நெறியாம் பிறநூலும் மயக்கறுக்கு மாறுளதோ

என்னும் அதன் பாடல் ஒன்று, திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் எழுதிய சிவஞான சித்தியார் நூலின் பரபக்க உரைநூலில் காட்டப்பட்டு, இது பௌத்தரின் சித்தாந்தத் தொகை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. [1]

மருள்தரு மனம் வாய் மெய்யில் கொலை முதல் வினை பத்தாமே என்பது சித்தாந்தத் தொகை [2]

(இந்தப் பத்துப் பாரமிதைகள் உடலில் பாரமாக இருக்கும் கூறுபாடுகள் என மணிமேகலை காப்பியத்தில் காட்டப்பட்டுள்ளன.) [3]

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் எழுதிய சிவஞான சித்தியார் நூலின் பரபக்க உரை, 65, 94
  2. நீலகேசி உரை 826 ஆம் பாடல்
  3. காதை 24
"https://tamilar.wiki/index.php?title=சித்தாந்தத்_தொகை&oldid=17228" இருந்து மீள்விக்கப்பட்டது