சாலிவாகனன் (திரைப்படம்)

சாலிவாகனன் 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், கே. எல். வி. வசந்தா, எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படத்தில் எம். ஜி. ஆர் (ராமச்சந்தர்) வில்லனாக நடித்துள்ளார்.[2]

சாலிவாகனன்
இயக்கம்பி. என். ராவ்
தயாரிப்புபாஸ்கர் பிக்சர்ஸ்
கதைகதை பி. எஸ். ராமையா
நடிப்புரஞ்சன்
எம். ஜி. ஆர்
என். எஸ். கிருஷ்ணன்
டி. எஸ். பாலையா
நாகர்கோவில் கே. மகாதேவன்
டி. ஆர். ராஜகுமாரி
கே. எல். வி. வசந்தா
டி. ஏ. மதுரம்
எம். ஆர். சந்தானலட்சுமி
வெளியீடுதிசம்பர் 22, 1944
ஓட்டம்.
நீளம்10996 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

வரவேற்பு

சாலிவாகனன் திரைப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்ததால், படத்தின் தயாரிப்பாளர்கள் பெருத்த நட்டம் அடைந்தனர். என். எஸ். கே.-டி. ஏ. எம். நகைச்சுவசைக்காட்சிகளும், படத்தில் உள்ள ஒரு வண்ண காட்சியும் பார்வைக்யாளர்களின் நினைவில் நின்றவைகளாகும்.

மேற்கோள்கள்

  1. ராண்டார் கை (26 சூன் 2011). "Saalivaahanan 1945". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/saalivaahanan-1945/article2135380.ece. பார்த்த நாள்: 26 செப்டம்பர் 2016. 
  2. பிரதீப் மாதவன் (13 அக்டோபர் 2017). "எஸ்.எஸ்.வாசனின் முதல் தெரிவு!". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19846041.ece. பார்த்த நாள்: 13 அக்டோபர் 2017. 
"https://tamilar.wiki/index.php?title=சாலிவாகனன்_(திரைப்படம்)&oldid=33207" இருந்து மீள்விக்கப்பட்டது