சாம்பவர் வடகரை


சாம்பவர் வடகரை (Sambavar Vadagarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தின், கடையநல்லூர் வட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை பேரூராட்சி ஆகும்.

சாம்பவர் வடகரை
—  முதல் நிலை பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் கடையநல்லூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஏ. கே. கமல் கிஷோர், இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

16,709 (2011)

1,519/km2 (3,934/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 11 சதுர கிலோமீட்டர்கள் (4.2 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/sambavarvadakarai

அமைவிடம்.

திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ; சுரண்டையிலிருந்து 5 கிமீ; ஆய்க்குடியிலிருந்து 5 கிமீ; கடையநல்லூரிலிருந்து 11 கிமீ தொலைவில் சாம்பவார் வடகரை பேரூராட்சி உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 15 கிமீ தொலைவில் உள்ள தென்காசி ஆகும்.

போக்குவரத்து

சுரண்டையில் இருந்து சாம்பவர் வடகரை வழியாக தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சேர்ந்தமரம் பகுதிகளுக்கும் தென்காசியில் இருந்து அருணாசலபுரம், வாடியூர், வீராணம், வீரகேரளம்புதூர், இடையர் தவணை பகுதிகளுக்கும், செங்கோட்டையில் இருந்து ஆணைகுளம், வீரகேரளம்புதூர் பகுதிகளுக்கும், திருமலைக்கோவிலில் இருந்து சாம்பார் வடகரை, சுரண்டை வழியாக திருநெல்வேலிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேரூராட்சியின் அமைப்பு

11 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 102 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,423 வீடுகளும், 16,709 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]


மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. சம்பவார் வடகரை பேரூராட்சியின் இணையதளம்
  4. சம்பவார் வடகரை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Population Census 2011
  6. Sambavar Vadagarai Town Panchayat
"https://tamilar.wiki/index.php?title=சாம்பவர்_வடகரை&oldid=41550" இருந்து மீள்விக்கப்பட்டது