சாமி போட்ட முடிச்சு

சாமி போட்ட முடிச்சு (Sami Potta Mudichu) 1991 ஆம் ஆண்டு ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தில் முரளி மற்றும் சிந்து முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.[3]

சாமி போட்ட முடிச்சு
Sami Potta Mudichu
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புடி. சிவா
கதைஆர். சுந்தர்ராஜன்
இசைஇளையராஜா
நடிப்புமுரளி
சிந்து
ஒளிப்பதிவுஇராஜராஜன்
படத்தொகுப்புஜி. ஜெயச்சந்திரன்
கலையகம்டி. சிவாவின் அம்மா கிரியேசன்ஸ்
விநியோகம்அம்மா கிரியேசன்ஸ்
வெளியீடு11 சனவரி 1991 (1991-01-11)[1][2]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

கதிர்வேலன் ( முரளி ) வாழ்க்கையின் குறிக்கோள், தன் தாத்தாவைக் கொன்ற மாமாவைப் பழிவாங்குவதுதான். இருப்பினும், அவரது மாமன் மகள் நீலவேணியை ( சிந்து ) சந்தித்தப் பிறகு அவர் மனம் மாறுகிறார்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலியும் கங்கை அமரனும் எழுதியிருந்தனர்.[4][5]

வ. எண் பாடல் பாடகர்கள் வரிகள்
1. "பொன்னெடுத்து வாரேன். " மனோ, கே. எஸ். சித்ரா கங்கை அமரன்
2. "கோடையிடி சத்தம்" மனோ, எஸ். ஜானகி
3. "நீலவேணி அம்மா நீலவேணி" மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா, சாய்பாபா குழுவினர்
4. "மாதுளங்கனியே நல்ல மலர்வன" இளையராஜா, எஸ். ஜானகி
5. "மங்கலத்து குங்குமப்பொட்டு" கே. எஸ். சித்ரா வாலி

வரவேற்பு

திரைப்படம் மோசமான விமரிசனங்களைப் பெற்றது. இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் வரவேற்பைப் பெற்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சாமி_போட்ட_முடிச்சு&oldid=33190" இருந்து மீள்விக்கப்பட்டது