சாந்தா கிருஷ்ணன்

சாந்தா கிருஷ்ணன் (பி: 1939) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியையாவார். பினாங்கு இந்து சங்கத்தின் தலைவியாக பல ஆண்டுகள் இருந்துள்ளார். இந்து சமயத் தொண்டர். தற்போது சமய வகுப்புகளையும், தேவார வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.

சாந்தா கிருஷ்ணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
சாந்தா கிருஷ்ணன்
பிறந்ததிகதி 1939
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1983 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், பக்திப் பாடல்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

இசைநாடாக்கள்

இவர் ஒரு சிறந்த பாடகராவார். இவரால் மூன்று இசைநாடாக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பரிசில்களும், விருதுகளும்

  • PJK அரசாங்க விருது

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=சாந்தா_கிருஷ்ணன்&oldid=6226" இருந்து மீள்விக்கப்பட்டது